காங்கிரஸால் பிரதமர்வேட்பாளரை அறிவிக்க முடியுமா? என பா.ஜ.க தேசியத்தலைவர் ராஜ்நாத்சிங் சவால் விடுத்துள்ளார்.அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இந்திய- அமெரிக்க தொழில்வர்த்தக சபை உறுப்பினர்கள் ஏற்பாடுகள்செய்த கூட்டத்தில் பங்கேற்று பேசும் போது இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மன்மோகன்சிங், ப.சிதம்பரம் மற்றும் சிலர் பிரதமர்வேட்பாளர் போட்டியில் உள்ளனர். அதனால் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்குவந்தால் யார் அடுத்தபிரதமர் என்பதில் அக்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பம்நிலவுகிறது.
எங்கள்கட்சி சார்பில் பிரசாரகுழுவை அமைப்பதில் ஜனநாயக ரீதியான கொள்கைகளை பின்பற்றுகிறது. ஆனால், இது போன்ற நடைமுறைகள் காங்கிரஸ் கட்சியில் இல்லை. பா.ஜ.க தரப்பில் பிரதமர்வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் எவ்வித குழப்பமும் இல்லை என்றார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.