பா.ஜ.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும்

 அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத்தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என பாஜக தேசியப் பொதுச்செயலாளர் அனந்த் குமார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அவர் பிடிஐ செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: காங்கிரஸ் கட்சியிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை’ என்பதே தேர்தலின் போது பா.ஜ.க.,வின் முழக்கமாக இருக்கும். வாஜ்பாய் ஆட்சியின் சாதனைகளையும், இப்போதைய மன்மோகன்சிங் அரசின் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப்பார்த்து வாக்களிக்குமாறு மக்களிடம் கோருவோம்.

வாஜ்பாய் ஆட்சியுடன் ஒப்பீடு: வாஜ்பாயின் ஆட்சி பொற்காலமாக இருந்தது. இப்போதைய காங்கிரஸ் தலைமையிலான 9 ஆண்டு ஆட்சி நாட்டை இருளில்தள்ளிவிட்டது. அவசரநிலை பிரகடனத்துக்கு பின் 1977-ம் ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடைபெற்ற போது மக்கள் எந்தமனநிலையில் இருந்தார்களோ, அதே மனநிலையில் தான் இப்போது மக்கள் இருக்கிறார்கள்.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. பணவீக்கவிகிதத்தை 3 சதவீதத்துக்குள் இருந்தது. தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டதால் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவளர்ந்தது.

ஆனால் இப்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததுவிட்டது. வளர்ச்சியில் நாடு பின்தங்கியுள்ளது. இத்தகைய பொருளாதாரசிக்கல்கள் அனைத்துக்கும், அத்துறையில் நிபுணத்துவம் பெற்றும் ஆட்சியின் முக்கியப்பதவிகளில் இருக்கும் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா ஆகியோர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியாவில் இளைஞர்சக்தி முக்கியமாக 18 முதல் 25 வயதுவரை உள்ளவர்கள் மோடியை தான் எதிர்கால நம்பிக்கையாகக் கருதுகிறார்கள் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...