எல்லையில் இந்தியவீரர்கள் கொல்லப்பட்டது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே.அந்தோனி வெளியிட்ட கருத்துக்கு பாஜக. தலைவர்கள் தங்கள் அதிருப்தியை பிரதமரை நேரில்சந்தித்து தெரிவித்தனர்.
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான நிலஎல்லை ஒப்பந்தம்தொடர்பாக விவாதிக்க வருமாறு பா.ஜ.க தலைவர்களை பிரதமர் மன்மோகன்சிங் அழைத்திருந்தார்.
இதையடுத்து, பாஜக. மூத்த தலைவர் அத்வானி, தேசியத்தலைவர் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி ஆகியோர் பிரதமரை புதன் கிழமை நேரில் சந்தித்தனர். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே.அந்தோனியும் உடன் இருந்தார்.
சுமார் ஒருமணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, எல்லையில் இந்தியவீரர்கள் கொல்லப்பட்டது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே.அந்தோனி வெளியிட்ட கருத்துக்கு பாஜக. தலைவர்கள் தங்கள் அதிருப்தியை பிரதமரிடம் தெரிவித்தனர்.
அந்தோனியின் இந்தத்தவறுக்கு அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் விளக்கம் தருமாறு அவர்கள் கோரினர். இது தொடர்பாக வியாழக்கிழமை அறிக்கை வெளியிடப்படும் என அவர்களிடம் பிரதமர் உறுதியளித்ததாக தெரிகிறது.
பாகிஸ்தானிடம் மென்மையானபோக்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் கொண்டிருப்பது ஏன்? என்றும் இவ்வளவு தீவிரமானதொரு பிரச்னையை அரசு மிகச்சாதாரணமாகக் கையாள்வது ஏன்? என்றும் அவர்கள் பிரதமரிடம் கேள்வியெழுப்பினர். இந்தவிஷயத்தில் ராணுவம் கூறுவதற்கும், பாதுகாப்பு அமைச்சர் கூறுவதற்கும் இடையில் முரண்பாடிருப்பது ஏன் என்று அறிந்துகொள்ள விரும்புவதாக பாஜக. தலைவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்தியவங்கதேச எல்லை ஒப்பந்தத்துக்கு தங்கள் எதிர்ப்பையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்த உடன் பாட்டால் இந்தியா பெறுவதைவிட, விட்டுக்கொடுப்பது அதிக நிலமாக இருக்கும் என அவர்கள் பிரதமரிடம் எடுத்துக்கூறினர்.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.