ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது மத மாற்றத்தை ஊக்கபடுத்தும்

 ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது  மத மாற்றத்தை ஊக்கபடுத்தும் ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என பிரதமருக்கு தமிழகமுதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருப்பதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது மத மாற்றத்தை ஊக்கபடுத்தும் வகையில் இருப்பதாக பா.ஜ.க தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; காங்கிரஸ் கட்சி நாட்டின் எல்லையை பாதுகாக்க தவறிவிட்டது. நாடு துண்டாடப் பட்டதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். இந்தியாவுக்கு சொந்தமானபகுதிகள் சீனா, பாகிஸ்தான் நாடுகளால் ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதற்கும் காங்கிரஸ் தலைவர்கள் தான் காரணம். அந்நிலை இப்போதும் தொடருகிறது. இந்தியாவில் இப்போதுள்ள பகுதிகளையும் காக்க அக்கட்சி தவறிவருகிறது. தேசவிரோதிகளுக்கு ஆதரவாக பேசுவதை காங்கிரஸ்கட்சி தனது கொள்கையாகவே மாற்றிக்கொண்டுவிட்டது.

ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருப்பது ஒரு தவறான முன் உதாரணமாகியுள்ளது. இது தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கு எதிரானநிலை. கிறிஸ்தவராக மாறிய ஹிந்து தாழ்த்தப்பட்டோருக்கு சலுகைகேட்பது ஆபத்தானது. மத மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், வாக்குவங்கியை மனதில்வைத்து இந்த கோரிக்கை எழுப்பப்பட்டிருப்பதாக கருதுகிறேன். எனவே தனது நிலைப்பாடு குறித்து தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

ஆடிட்டர் ரமேஷ் கொலையாளிகளை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் கைதுசெய்ய வேண்டும் என்பதற்காக சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் தொடங்கி 10 நாள்களாகிறது. புலனாய்வுக்குழு அதிகாரி மஞ்சுநாத்தும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்டார். குற்றவாளிகள் மட்டும் இன்னும் கைதுசெய்யப்பட வில்லை. இருப்பினும் தமிழக அரசுமீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.ஆடிட்டர் ரமேஷ் கொலையை தொடர்ந்து பா.ஜ.க தலைவர்களுக்கு கடிதங்கள் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. எனக்கும் ஒருகடிதம் அனுப்பப்பட்டது. அதை புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்து விட்டோம். விசாரணையை திசைத்திருப்பும் நோக்கில்கூட இவை அனுப்பப்பட்டிருக்கலாம்.

தமிழகத்துக்கு பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் விரைவில் வர உள்ளனர். அவர்கள் எந்த ஊருக்கு எப்போதுவருகின்றனர் என்பது இன்னும் முடிவு செய்யப் படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் கூட்டணி அமைத்தே போட்டியிடும். அது யாருடன் என்பது தேர்தலின் போது முடிவு செய்யப்படும்.பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் இந்திய மீனவர் பிரச்னை, ஈழத்தமிழர் பிரச்னை போன்றவற்றுக்கு தீர்வுகாணப்படும். இலங்கைக்கு ஆயுதம் வழங்கினால் அது தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்தபடும் என்பதால் பாஜக ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு ஆயுதம் வழங்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மறுத்து விட்டார் என்றார் இல.கணேசன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...