ஆசைப் படுவது யார்? என்று நீங்கள் அமைதியாக உட்கார்ந்து சிந்திங்கள். உங்கள் உடலா? மனமா? நிச்சயம் உடலாக இருக்கமுடியாது. ஏனெனில் அது மனம்வழியே செயல்படுகிறது. பிறகு மனமா? ஆம்.
இப்பொழுது அப்படியே இருக்கட்டும். மனம் எப்படி செயல் படுகிறது? உங்கள் இறந்த கால, வருங் கால எண்ணங்களினால், அறிந்ததை அடைய ஆவல்கொண்டு உங்களை
அலையவைக்கிறது.
"இதோ இன்பம், அதோ இன்பம்" என உங்களை விரட்டிக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஒன்றை அடைந்தால், அதில் சலிப்புற்று, வேறு ஒன்றிற்கு ஏன் ஆசை படுகிறீர்கள்? என்று
என்றைக்காவது ஆழ்ந்து சிந்தித்திருக்கிறீர்களா?
இந்த உடலுக்கும் மனதிற்கும் எது ஆதாரம், ஏன் மனம் அலை பாய்ந்துக் கொண்டிருக்கிறது
என்று தனிமையாக சிந்தித்து இருக்கிறீர்களா? அப்படி ஒருவர் சிந்திக்கத்தொடங்கினால்,
உண்மையில் "தான் யார்" என விளங்க ஆரம்பிக்கும். அது உங்கள் "உயிர்தன்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை.
அது தன் உணர்வாய், தன் அறிவாய், தன்னையே தேடுகிறது. ஆனால் அதுவே மனமாகி, படர்க்கை நிலை அடைந்து, அந்த "தேடுதலை" சாதாரணமக்களிடம் இந்த உலகத்தில் தேடவைக்கிறது.
தன்னை தானேதேடுவது உண்மைநிலை. உலகத்தில் தேடுவது பொய்மை நிலை. இந்த வித்தியாசத்தை ஒருவன் நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.