காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரி ஆகஸ்ட் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

 காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரி ஆகஸ்ட் 24ஆம் தேதி  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த்மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி பா.ஜ.க சார்பில் தமிழகம்முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பாஜக மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

வரும் நவம்பரில் இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்குமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிஎல். பெரீஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரில் அழைப்புவிடுத்துள்ளார்.இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான அந்நாட்டு அதிபர் ராஜபட்சவுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

தமிழகமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக்கூடாது. அதோடு காமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை அதிபர் தலைமைவகிக்கும் வரை அதிலிருந்து இந்தியா விலகியிருக்க வேண்டும்.இதனையும்மீறி மாநாட்டில் பங்கேற்றால், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இந்தியா அங்கீகரித்ததாகி விடும். எனவே, மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 24ஆம் தேதி தமிழகம்முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

“மெட்ராஸ்கபே’ படத்தை திரையிடக்கூடாது: இலங்கை தமிழர்களின் துயரங்களை அறியாமல், அவர்களை தீவிரவாதிகளைப்போல சித்தரித்து மெட்ராஸ் கபே என்ற பெயரில் திரைப்படம் எடுத்திருப்பது கண்டனத்துக் குரியது. இப்படத்தை தமிழகம் மட்டும் அல்ல, நாட்டில் எங்கும் திரையிட அனுமதிக்கக்கூடாது என்று பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...