ஐ.மு., கூட்டணி ஆட்சிசெய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுவிட்டதாக மாநிலங்களவையில் பாஜக.-வின் நஜ்மா ஹெப்துல்லா குற்றம் சுமத்தியுள்ளார்.புனேவில் சமூகசேவகர் நரேந்திரதபோல்கர் படுகொலை செய்யப்பட்டது, தில்லியில் பெண் ஒருவர் கொல்லப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறுபேசினார். அவையின் விவாத நேரத்தின்போது அவர் பேசியதாவது:
தலைநகர் டெல்லியில், திங்கட்கிழமை ஒருபெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய்க் கிழமை, ஆறுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் இரண்டுபெண்கள் கழுத்தறுபட்டு இறந்துள்ளனர். ஒரே வீட்டில் நான்குபேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இதற்குமுன்பு டெல்லியில் தினம்தோறும் பாலியல் வன்கொடுமை செய்திகளாக வந்துகொண்டிருந்தன. இப்போது கொலைகள், அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்களைக் கொலைசெய்வது சர்வசாதாரணமாகி விட்டது. எங்கெல்லாம் ஐ.மு.,கூட்டணி ஆட்சிசெய்கிறதோ, அங்கெல்லாம் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது .
டெல்லிக்கு விரைவில் தேர்தல் வரவிருப்பதால் அங்கு காங்கிரஸின் ஆட்சி நீண்டநாள்களுக்கு நிலைத்திருக்காது என்று நஜ்மா ஹெப்துல்லா பேசினார்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.