மோடியை தூற்றுவது மக்கள் அல்ல அரசியல் கட்சிகளே

 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் துரதிருஷ்டமானது; அதற்காக அந்த மாநில முதல்வர் நரேந்திரமோடியின் மீது குற்றம் சுமத்துவது நியாயமல்ல என பாஜக., தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க சிறுபான்மை பிரிவின் தேசிய நிர்வாகக் குழு தில்லியில் ஞாயிற்றுக் கிழமை கூடியது. இதில்பேசிய ராஜ்நாத் சிங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது : குஜராத்தில் நடந்த கலவரத்தை நியாயப்படுத்த வில்லை. இது துரதிருஷ்டமானது. ஆனால், இந்த கலவரத்தை வைத்துக்கொண்டு சில அரசியல்கட்சிகள் மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்த முயற்சிக்கின்றன.

மற்ற மாநிலங்களைப் போல குஜராத்தும் ஓர்மாநிலம். அங்கு நடந்த கலவரசம்பவம் துரதிருஷ்டமானது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அதற்காக மோடியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதுசரியல்ல. இதற்கு மக்கள் காரணமில்லை. சில அரசியல் கட்சிகள் தான் மோடியை தனிமைப்படுத்த இவ்வாறு குற்றம் சாட்டுகின்றன. கலவரத்துக்கு பின்னால் மோடி இருப்பதாக தொடர்ந்து செய்திபரப்பி வருகிறார்கள்.

குஜராத் அரசு பாகுபாடுகாட்டுகிறதா என்பதை அந்தமாநிலத்தில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் கேளுங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி இப்பிரச்னையை வைத்து மக்களிடையே பிளவைஏற்படுத்த முயற்சிக்கிறது. ஆங்கிலேயர் எப்படிநம்மிடையே பிளவை ஏற்படுத்தினார்களோ அதேகொள்கையை காங்கிரஸýம் கடைப்பிடிக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல்கட்சிகள் நாட்டை பிளவு படுத்த விஷவிதையை தூவுகின்றன. ஆங்கிலேயரின் வேறுகொள்கைகளை கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ ஆனால், பிரித்தாளும்கொள்கையை காங்கிரஸார் கடைப்பிடிக்கிறார்கள்.

பா.ஜ.க குறித்து இவ்வாறு தவறானபிரசாரத்தை சில அரசியல்கட்சிகள் மேற்கொள்வதால் பா.ஜ.க.,வில் உள்ள சிறுபான்மை தலைவர்களுக்கு அது சங்கடத்தை உருவாக்கியுள்ளது. அவர்களால் பா.ஜ.க.,வின் கொள்கை, கோட்பாடுகளை மக்களிடையே பிரசாரம்செய்ய முடியவில்லை. மற்ற அரசியல் கட்சிகளைப் போல பாஜக அவர்கள் மீது அவதூறுகளை பரப்பாது.

எந்தமக்கள் மீதும் வெறுப்புகாட்ட வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை அல்ல. நாங்கள் ஏதாவது தவறுசெய்திருந்தால் அதை திருத்தி கொள்ளத்தயாராக இருக்கிறோம். கலாசார தேசியம்வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை.

பாஜகவில் தீவிரமாகசெயல்படும் நஜ்மா ஹெப்துல்லா, முக்தார் அப்பாஸ் நக்வி, ஷா நவாஸ் ஹுசேன் போன்ற தலைவர்களின் சேவை மிகவும் பாராட்டுக் குரியது. கட்சியின் முக்கிய_ முடிவுகளை எடுக்கும் குழுவில் இவர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

கடந்த 50 ஆண்டுகளாக இந்நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ்கட்சி, இந்து-முஸ்லிம்களிடையே உறவுமேம்பட எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை. இது அவர்களது பொறுப்பில்லையா?

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு சிறுபான்மையினர் நலனுக்காக பட்ஜெட்டில் ரூ.2,000கோடி ஒதுக்கியது. ஆனால், அதில் 900 கோடி ரூபாய் அவர்களது நலனுக்கு செலவுசெய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்காக அறிவிக்கப்பட்ட பலதிட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்காக பலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதை அம்மக்கள் பாராட்டினார்கள்.

பொருளாதாரம் மோசமாகும்: ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்ல தல்ல. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள உணவுபாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் போது நாட்டின் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...