பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல், டீசல் விற்பனைசெய்யும் நேரத்தை குறைக்கும் வகையில், இரவு, 8:00 மணியில் இருந்து காலை, 8:00 மணிவரை மூட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் . இதன் மூலம், 16 ஆயிரம்கோடி ரூபாய் அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த முடியும்
என்று மத்திய அரசுக்கு, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், வீரப்பமொய்லி பரிந்துரை செய்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக., செய்திதொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் நிருபர்களிடம் கூறியதாவது , பெட்ரோல் பங்க்குகளை ஏன் மூடவேண்டும். அதற்குபதில் மத்திய அரசு நாட்டையே மூடிவிடலாம். கார்கள் மற்றும் இரண்டுசக்கர வாகனங்களுக்கு, காலையிலேயே பெட்ரோல் போடத் தவறியவர்கள், இரவில் என்னசெய்வர். இது விபரீதமானமுடிவு என்றார்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.