இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவுநிறுவனமான ஐஎஸ்ஐ.,தான் நிதி உதவி செய்தது என இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் யாசின்பட்கல் தெரிவித்துள்ளான்.
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின்பட்கல் அண்மையில் இந்திய-நேபாள எல்லையில் கைதுசெய்யப்பட்டான். டெல்லிக்கு கொண்டுவரப்பட்ட அவனிடம் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
விசாரணையில் ஹைதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு, புனே ஜெர்மன்பேக்கரி குண்டுவெடிப்புகளில் தனக்கு பங்குள்ளதை யாசின் ஒப்புக்கொண்டான். இந்நிலையில் அவனது அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவுநிறுவனமான ஐ.எஸ்.ஐ நிதி உதவிசெய்தது என்று யாசின் தெரிவித்துள்ளான். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இந்தியாவில் உள்ள தீவிரவாத அமைப்பு, அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று ஐ.எஸ்.ஐ இத்தனை நாட்களாக கூறிவந்தது. ஆனால் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை ஐ.எஸ்.ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக யாசின் தெரிவித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.