இந்திய பெருங்கடலில், 2004ல் ஏற்பட்ட கடுமையான பூகம்பம் மற்றும் சுனாமியை தொடர்ந்து, ஒத்துழைத்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டது ‘குவாட்’ அமைப்பு.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. தென்சீனக் கடலின் பெரும்பகுதியை சீனா உரிமை கோருவதுடன், கடல்சார் பாதுகாப்பில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதையடுத்து, இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் இடையே உள்ள இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு, வணிகம், அமைதி உள்ளிட்டவற்றில், குவாட் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அமைப்பு துவங்கப்பட்டு, 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளனர். அதில், ‘இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் நலனுக்காக தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்’ எனக் கூறப்பட்டுள்ளது. குவாட் அமைப்பின் அடுத்த மாநாடு, இந்தியாவில் இந்தாண்டின் இரண்டாம் பகுதியில் நடக்க உள்ளது.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |