உ.பி.,யில் நடைபெற்ற கலவரம்குறித்து கருத்துதெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ்கட்சி மதவாத அரசியல் நடத்துகிறது என்றும், அதனை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
காங்கிரஸ்கட்சி கடந்த 100 ஆண்டுகளாக நாட்டுமக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஆங்கிலேயரை மிஞ்சும்வகையில் செயல்பட்டு வருகிறது. நாடு விடுதலையடைந்த போது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற ஒற்றை சிந்தனையோடு மதரீதியான பாகுபாடுகளை மனதில்கொண்டு செயல்பட தொடங்கியது.
தற்போது நாடுமுழுவதும் பலஇடங்களில் கலவரங்கள் நடக்கிறது. அங்கெல்லாம் கலவரத்தை அடக்காமல் வாக்குவங்கியை கருத்தில்கொண்டு செயல்படுவதால் கலவரக் காரர்கள் உற்சாகம் அடைந்து மேலும் மேலும் கலவரத்தை தூண்டிவிடுகிறார்கள்.
உ.பி.யில் முசாபர் நகர் பகுதியில் கவலரபகுதியை பார்வையிடசென்ற பிரதமர், சோனியா, ராகுல் ஆகியோர் பாதிக்கப்பட்ட இரண்டு தரப்பினரையும் பார்க்கவில்லை.
ஒருதரப்பை மட்டும் பார்த்து ஆறுதல்கூறி இருப்பது காங்கிரஸ் ஓட்டுவங்கியை கருத்தில் கொண்டு செயல்படுவதை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருமதங்களை சேர்ந்தவர்களை சந்தித்து பேசியிருந்தால் உண்மை புரிந்திருக்கும். ஆனால் உ.பி.யில் அதிக இடங்களை கைப்பற்றவேண்டும் என்ற சிந்தனையோடு செயல்படுகிறார்கள்.
ஒட்டுமொத்த வாக்குகளையும் ஒருமுகமாக தருகின்றவர்களை மட்டும் பார்த்து இருக்கிறார்கள். மற்றவர்கள் பாதிக்கப்பட்டாலும் கட்சி ரீதியாக எப்படியும் வாக்குகளை பிரித்து வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தோடு இந்து சமுதாய பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமல்சென்றுள்ளனர்.
இந்தசெயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மதத்தின்பெயரால் மக்களை பிரித்தாளும் காங்கிரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.