ரூ. 10 நுழைவுக்கட்டணம் செலுத்தி அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே திருச்சியில் நரேந்திரமோடி பங்கேற்கும் மாநாட்டில் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் வரும் 26ஆம் தேதி நடைபெறும் பா.ஜ.க மாநில இளைஞரணி மாநில மாநாட்டில் பா.ஜ.க பிரதமர்வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி பங்கேற்கிறார். பாஜக தேர்தல் பிரசாரக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்து அவர் ஆதரவு திரட்டி வருகிறார். மோடியின் வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதால் பா.ஜ.க.,வினர் மிக உற்சாகத்துடன் மாநாட்டு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் திருச்சி ஜிகார்னர் மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மாநாட்டுமேடை செங்கோட்டையில் பிரதமர் தேசியக்கொடியேற்றி பேசுவதுபோல வடிமைக்கப்பட உள்ளது.மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பெரும்வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மோடியின்வருகையை எதிர்பார்த்துள்ளனர். அது குறித்து எங்களிடம் பேசியும்வருகின்றனர்.மோடியை பார்ப்பதற்காக இது வரை இணையதளம் மூலமும், நேரடியாகவும் சுமார் 1 லட்சம்பேர் பதிவு செய்துள்ளனர். இணையதளம் மூலம் பதிவுசெய்தவர்களுக்கு இமெயில் மூலம் அடையாள அட்டை அனுப்பிவைக்கப்படும். அதனுடன் ரூ. 10 நுழைவுக்கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம்.
நுழைவுக்கட்டணம் செலுத்தி அடையாள அட்டை பெற்றவர்கள்மட்டுமே மாநாட்டில் அனுமதிக்கப் படுவார்கள். இதற்காக மாநாட்டு அரங்கில் 200க்கும் அதிகமான கவுன்டர்கள் அமைக்கப்படும்.கூட்டத்தில் 1 லட்சம்பேர் அமர இருக்கைகள் போடப்படும். கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்காக 500க்கும் அதிகமான பா.ஜ.க தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங், தேசிய இளைஞரணித் தலைவர் அனுராக் சிங் தாகூர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்ரனர் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.