உ.பி.,யின் முசாஃபர் நகரில் நடந்த வகுப்பு கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய சமாஜவாதி அரசை நீக்கிவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.
வரும் மக்களவை தேர்தலுக்கான உத்திகள்குறித்து, அசாம்மாநிலம் குவாஹாட்டியில், வட கிழக்கு மாநில பா.ஜ.க தலைவர்களுடன் அக்கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் புதன்கிழமை ஆலோசனை மேற்க்கொண்டார் . அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உ.பி முசாஃபர் நகரில் நடந்த வகுப்பு கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய சமாஜவாதி அரசை நீக்கிவிட்டு, அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்தவேண்டும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற இதைத்தவிர வேறுவழி தெரியவில்லை.
மத்திய அரசு இந்தவிவகாரத்தில் தலையிட்டு சமாஜ வாதி அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். முசாஃபர் நகரில் நிலவிவரும் பதற்றம் குறித்து தனியார் தொலைக் காட்சிகளில் செவ்வாய்க் கிழமை ஒளிபரப்பிய காட்சிகளின் அடிப்படையில் உரியநடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
சமாஜவாதி அரசுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத்தயங்கினால் அக்கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக உத்தரப்பிரதேச மக்கள் எண்ணத் தொடங்கிவிடுவார்கள். காங்கிரஸ் அரசு பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி ஆட்சியை தக்கவைக்க விரும்புகிறது என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.