40 வருடங்களில் இல்லாதளவிற்கு இளைஞர்களிடையே எழுச்சி

 பாராளுமன்றதேர்தலில் தேசிய அளவில் 3வது அணி அமைய வாய்ப்பில்லை. நரேந்திர மோடி பிரதமராவது காலத்தினகட்டாயம். கடந்த 40 வருடங்களில் இல்லாதளவிற்கு நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பிறகு நாடு முழுவதும் இளைஞர்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; மோடி என்பது அனைவருக்கும் தெரிந்தபெயராக வீட்டுக்கு வீடு பேசப்பட்டுவருகிறது. திமுக. இருக்கும் அணியில் அதிமுக. இருக்காது. கம்யூனிஸ்டுகள் இருக்கும் அணியில் மம்தா இருக்கமாட்டார். முலாயம்சிங் இருக்கும் அணியில் மாயாவதி இருக்கமாட்டார். அதனால் பாராளுமன்ற தேர்தலில் 3வது அணிக்கு சாத்தியமில்லை.

தவறுக்குமேல் தவறுகள் செய்து வருவதால் மக்கள் வெறுப்படைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய முடிவெடுத்து விட்டனர். அது நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான். திருச்சியில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் இளந்தாமரை மாநாட்டில் மாலை 3மணிக்கு நிகழ்ச்சிதொடங்கி 7 மணிக்கு நிறைவடையும்.

இதில் அகில இந்தியஇளைஞரணி தலைவர் அனுராத் தாக்கூர், அகில இந்திய பொதுசெயலாளர் முரளிதர் ராவ், கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேசியபின் நரேந்திர மோடி இளைஞரணி மாநாட்டு தலைமை உரையாற்றி பாராளுமன்றதேர்தல் பிரசார தொடக்கமாக உரையாற்றுவார்.

தேசிய நலனில் அக்கறையுள்ள தமிழருவிமணியன் போன்றவர்கள் தேமுதிக., மதிமுக. ஆகியகட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்வதை பாஜக ஆதரிக்கிறது.

அமெரிக்காவில் நடைபெற்ற அழகிப்போட்டியில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஒருபெண் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அந்நாட்டினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரை ஏற்றுக்கொள்ள அமெரிக்கர்கள் மறுக்கும்நிலையில் அந்நியநாட்டை சேர்ந்த சோனியா காந்தி பிரதமராகவோ அல்லது அரசுக்கு தலைமை வகிக்கவோ எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...