சுதந்திரம்பெற்று 60 வருடங்களுக்கு பிறகும், மீண்டும் நாட்டின் உயரியபதவிக்கு ஒரு வெளிநாட்டவரை உட்காரவைப்பது 100கோடி மக்களும் திறானியற்றவர்கள் என்றே ஆகிவிடும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
சோனியாகாந்தி, ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திரா காந்தியின் மருமகளாகவும் வந்ததால், அவர் நமது அன்பையும் நேசத்தையும்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவரைமரியாதையுடன் பார்க்கிறோம். ஆனால், இந்தியாவின் பிரதமராகவர விரும்பினால், அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
நமது புண்ணியபூமி 150 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டவரின் பிடியின்கீழ் இருந்தது. அவர்களிடமிருந்து சுதந்திரம்பெற நம் முன்னோர் எண்ணற்றோர் உயிர்தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து சுதந்திரம்பெற்று 60 வருடங்களுக்கு பிறகும், மீண்டும் நாட்டின் உயரியபதவிக்கு ஒரு வெளிநாட்டவரை உட்காரவைப்பது 100 கோடி மக்களும் திறானியற்றவர்கள் என்றாகிவிடும். இது மக்களின் உணர்வுகளை பெரிதளவில்பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.