உ.பி.,யின் பலபகுதிகளில் 9 பெரிய கூட்டங்களுக்கு ஏற்பாடு

உ.பி.,யின்  பலபகுதிகளில் 9 பெரிய கூட்டங்களுக்கு ஏற்பாடு எதிர் வரும் 5 மாநில பேரவைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உத்திகுறித்து பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் ஆர்எஸ்எஸ். தலைவர் சுரேஷ்சோனியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நரேந்திரமோடி இந்தவார இறுதி நாள்களில் தில்லியில் தங்கி தேர்தல் உத்திவகுப்பதில் மும்முரமாக ஈடுபட இருப்பதாகவும் . அவர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நீண்டநேரம் விவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் கட்சிவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடுமுழுவதும் தாம் கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் பா.ஜ.க.,வின் முக்கிய தலைவர்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று மோடி விரும்புவதாகவும் தெரிகிறது.

அடுத்த சிலவாரங்களில் நாடுமுழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க மோடி திட்டமிட்டுள்ளார். உ.பி.,யின் பலபகுதிகளில் 9 பெரிய கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தமாநிலத்தை பாஜக மிக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. ஏனெனில், இந்தமாநிலத்தில் 80 மக்களவைத்தொகுதிகள் இருப்பதால் அங்கு கணிசமான வெற்றிகளைக் குவிக்கவேண்டும் என்பதில் அக்கட்சி முனைப்பாக உள்ளது.

தில்லியில் இந்தமாதம் 29இல் நடைபெற உள்ள கூட்டத்திலும் மோடி பங்கேற்க உள்ளார். இந்தக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளில் பா.ஜ.க.,வின் மத்திய குழுக்களை ஈடுபடுத்துவது மட்டுமின்றி, தேர்தல்பிரசாரக் குழுவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 20 துணை குழுக்களுக்கு பொறுப்புகளை பிரித்துக்கொடுப்பது குறித்தும் மோடி, ராஜ்நாத் சிங்குடன் விவாதித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...