பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர்க்குள் ராணுவ உடையில் ஊடுருவிய 3 தற்கொலைப்படை தீவிரவாதிகள், போலீஸ் நிலையத்திலும் ராணுவமுகாமிலும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 4 போலீசார், 4 ராணுவவீரர்கள் உட்பட 10 பேரை கொன்றனர். முகாமில் புகுந்து தாக்கிய தீவிரவாதிகள் அனைவரையும் ராணுவம் சுட்டு கொன்றது.
ஜம்மு பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்துக்குள் பாகிஸ்தானில்இருந்து நேற்று அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் ஊடுருவினர். இந்தியராணுவ வீரர்களின் சீருடையை அணிந்திருந்த அவர்கள், ஆட்டோரிக்ஷாவில் வந்து கத்துவா என்ற இடத்தில் உள்ள ஹிரா நகர் காவல் நிலையத்தின்மீது காலை 6.45க்கு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். கையெறிகுண்டுகளை வீசியபடி உள்ளேசென்றனர். திடீர் தாக்குதலால் போலீசார் நிலைக் குலைந்தனர். அங்கிருந்த சிறப்பு எஸ்.ஐ மற்றும் 3 போலீசாரை தீவிரவாதிகள்கொன்றனர். காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 2 கைதிகளும் கொல்லப்பட்டனர்.
பின்னர், ஜம்மு , பதன்கோட் தேசியநெடுஞ்சாலைக்கு வந்த தீவிரவாதிகள், அந்தவழியாக வந்த லாரி ஒன்றை துப்பாக்கி முனையில் கடத்தி அதில் ஏறிகொண்டனர். சிறிது தூரம் அதில் சென்ற பிறகு, அதன் டிரைவரை சுட்டுகாயப்படுத்தி விட்டு வேறொரு டிரக்கை வழிமறித்து ஏறிகொண்டனர். அங்கிருந்து நேராக, சம்பாவில் உள்ள ராணுவ முகாமின் எதிரே வாகனத்தை நிறுத்தியதும் முகாமைநோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, கையெறி குண்டுகளை வீசினர். வாசலில் காவலுக்குநின்ற 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். பின்னர், முகாமுக்குள் நுழைந்த தீவிரவாதிகள், சரமாரியாக தாக்குதல்நடத்தினர். அதற்குள் ராணுவ வீரர்களும் உஷாராகி பதிலடிகொடுத்தனர்.
கமாண்டோ வீரர்களும் அழைக்கப்பட்டனர். தீவிரவாதிகள் தப்பி ஓடிவிடாதபடி ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் லெப்டினென்ட்கர்னல் பிகாரம்ஜித்சிங் உட்பட 2 பேர் பலியாகினர். 9 மணிநேரம் நடந்த கடும்சண்டைக்குப் பிறகு, 3 தீவிரவாதிகளையும் ராணுவவீரர்கள் சுட்டு கொன்றனர்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.