தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்றதை போன்று ஜமாத் உத்தாவா தலைவர் ஹபீஸ் சயீத்தையும், தாதா தாவூத் இப்ராஹிமையும் பாகிஸ்தானுக்குள்ளேயே வைத்து சுட்டுத்தள்ள வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு அவர் பதில்அளித்து கூறியதாவது:-
பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து ராணுவத்தி னரையும், குடிமக்களையும் கொன்றுசெல்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்நேரம் நரேந்திரமோடி பிரதமராக இருந்து இருந்தால், இந்தியசொல்படி பாகிஸ்தான் நடந்திருக்கும். ஆனால் நமது பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் மீண்டும் இதுபோன்று வார்த்தைகளை சொல்லிக்கொண்டே தான் இருந்தாகவேண்டும்.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளில் அதிகமானோர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகதெரியும். இனி பேச்சுவார்த்தைக்கு இங்கு என்னஇருக்கிறது. ஒருநாட்டின் பிரதமர் நடந்துகொள்ள வேண்டியபடி நம்பிரதமர் நடந்து கொள்ளவில்லை.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமிருந்து சிலவற்றை மன்மோகன்சிங் கற்றுக்கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்துகொண்டு அவர் பாகிஸ்தானை தாக்கினார். தீவிரவாதி ஒசாமாபின்லேடனை சுட்டுக் கொன்றார். இன்று சிரியாவை மிரட்டும்வல்லமையை பெற்றுள்ளார்.
அது போன்று பிரதமர், ஜமாத் உத்தாவா தலைவர் ஹபீஸ் சயீத்தையும், தாதா தாவூத் இப்ராஹிமையும் பாகிஸ்தானுக்குள்ளே சுட்டுத்தள்ளவேண்டும் என்று அவர் பதிலளித்தார்.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.