காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் போல செயல்பட்ம சாக்கோ

 2ஜி அலைக்கற்றை விவகாரம்தொடர்பான அறிக்கையை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் போல செயல்பட்டு ஜே.பி.சி தலைவர் பிசி. சாக்கோ நிறைவேற்றியவிதம் கண்டிக்கத்தக்கது என்று ஜேபிசியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க உறுப்பினர்கள் கண்டனம்தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த் சின்ஹா, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத்முன்டே, ஹரேன்பாடக், தர்மேந்திர பிரதான் ஆகியோர் மக்களவைத் தலைவருக்கு வியாழக் கிழமை கடிதம் எழுதியுள்ளனர். அதுகுறித்து தர்மேந்திரபிரதான் நீங்கலாக மற்ற ஐந்து ஜே.பி.சி உறுப்பினர்களும் வியாழக் கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“எங்கள் மறுப்புரைகடிதத்தில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஜே.பி.சி தலைவர் சாக்கோ திருத்தி விடுவார் என்ற சந்தேகம் காரணமாக, நேரடியாக மக்களவைத் தலைவருக்கு கடிதத்தை அனுப்பியுள்ளோம். அலைக் கற்றை விவகாரத்தை ஆராய்ந்தவரை, அதில் பிரதமர், பிரதமர் அலுவலகம், மத்திய நிதியமைச்சகம், மத்திய தொலைத்தொடர்பு துறை ஆகியவற்றின் அதிகாரிகள் கூட்டுச்சேர்ந்து பல விஷயங்களை மறைத்துள்ளதாக அறிகிறோம்.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நேரடியாக தொடர்புகொண்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா. ஜேபிசி முன்பு நேரில்ஆஜராக அவர் பலமுறை அனுமதிகேட்டும் அதை சாக்கோ நிராகரித்தார்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்குவரும் முன்பே, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக சாக்கோ புகார்கூறினார். அதையடுத்து, பாஜக கூட்டணி ஆட்சிநடைபெற்ற காலத்தில் நிதி மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர்களாக இருந்த ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த்சின்ஹா, சுஷ்மாஸ்வராஜ், அருண்ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், அருண் செüரி உள்ளிட்டோர் ஜேபிசி முன்பு ஆஜராக தயாராக இருக்கிறோம் என அறிவித்தோம். ஆனால், எங்களை அனுமதித்தால் காங்கிரஸில் உள்ள மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை விசாரணைக்கு அழைக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும் என சாக்கோ கருதி எங்களை அழைக்காமல் தவிர்த்தார் என பாஜக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...