தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜகவுக்கு 28 இடங்கள் கிடைக்கும் என்றும் , பாஜக.,வே அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தில்லி பிரதேசத்தில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்தல் பிரசாரக்களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல்களத்தில் முக்கிய கட்சிகளான பா.ஜ.க.,வுக்கும், காங்கிரஸýக்கும் ஆம் ஆத்மி சவாலாக இருந்துவருகிறது.
இதனிடையே, இத்தேர்தல் தொடர்பாக அக்டோபர் 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தில்லியில் உள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 3,838 வாக்காளர்களிடம் ஏபிபி நியூஸ் – நீல்சன் அமைப்பு கருத்துக் கணிப்பை நடத்தியது.
அதில் கிடைத்த விவரம்:
மொத்தம் உள்ள 70 இடங்களில் பா.ஜ.க.,வுக்கு அதிகபட்சமாக 28 இடங்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு 18 இடங்கள், பிறகட்சிகளுக்கும், சுயேச்சைகளுக்கும் 2 இடங்களும் கிடைக்கும். தலை நகரை 15 ஆண்டுகளாக ஆட்சிசெய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பு கூறுகிறது.
தேர்தலில் பாஜகவுக்கு 34 சதவீதம், காங்கிரஸýக்கு 27 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்ஆத்மி கட்சி தேர்தல் களத்தில் இல்லாமல் இருந்தால் 15 சதவீதம் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கக்கூடும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.