வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை

 தமிழகம் முழுவதும் "வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை' என்ற பெயரில் பாத யாத்திரை மூலம் மக்களைச் சந்திக்க தமிழக பாஜக. திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 1 முதல் 20-ஆம் தேதி வரை இந்தப் பாத யாத்திரை நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி திருச்சியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற மாநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதன் மூலம் மோடியை பிரதமராக்க தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர் என்பது தெளிவாகிறது.

அக்டோபர் 18-ஆம் தேதி சென்னை வந்த மோடி, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கட்சியின் வளர்ச்சிக்கும், தேர்தலில் மக்களை எதிர்கொள்ளவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி, பாஜகவின் கொள்கைகளையும், மோடி பிரதமராக வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்த பாத யாத்திரையாக வீடுதோறும் சென்று மக்களைச் சந்திக்க முடிவெடுத்துள்ளோம். இதற்கு "வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரம் பஞ்சாயத்துகளிலும் பா.ஜனதா தொண்டர்கள் பாதயாத்திரை செல்வார்கள். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் மட்டுமே யாத்திரையில் பங்கேற்பார்கள்.

ஒரு தொண்டர் ஒருநாள் அல்லது 2 நாள் யாத்திரையில் கலந்து கொள்வார். அடுத்த மாதம் (டிசம்பர்) யாத்திரை தொடங்குகிறது. 20–ந்தேதிக்குள் யாத்திரை நிறைவு பெறும்.

ஏதாவது ஒரு பஞ்சாயத்தில் அகில இந்திய செயலாளர் முரளிதரராவ் கலந்து கொள்வார். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தலைமை தாங்கும் நிர்வாகியோடு குறைந்த பட்சம் 10–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள். இதன்படி இந்த பாத யாத்திரையில் 1½ லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள்.

1998-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை வாஜ்பாய் அரசின் சாதனைகள், குஜராத் உள்பட பாஜக ஆளும் மாநில அரசுகளின் சாதனைகள், நரேந்திர மோடியின் சாதனைகள், பாஜகவின் கொள்கைகள், திóட்டங்கள் ஆகியவை அடங்கிய சிறு புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் அப்போது மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

இந்த யாத்திரையில் அனைத்து நிர்வாகிகளும் குறைந்தபட்சம் 2 நாள்களாவது முழுமையாக பங்கேற்பார்கள். இதன் மூலம் தமிழக மக்கள் அனைவரையும் பாஜகவினர் நேரடியாகச் சந்திக்க இருக்கிறார்கள் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...