எனக்கு புரிந்தவகையில் இல்லை. அப்படி என்றால் திருமாலை வணங்குபவர்கள் அனைவரும் ஒருசாதியாகவும், சிவனை வணங்குபவர்கள் அனைவரும் ஒரு சாதியாகவும் இருந்திருக்கவேண்டும்.
தொழிலை சார்ந்தே சாதிகள் அமைந்தன. அதனால் அன்றையநிலையில் ஒருசில நன்மைகளும் இருந்தன. வைத்தியன் மகன் சிறு வயதிவிருந்தே தந்தைக்கு உதவிசெய்து தொழிலைக் கற்றுக்கொண்டான். வணிகனுடைய பிள்ளைகள், கோவில் அர்ச்சகரின் பிள்ளைகள், விவசாயின்பிள்ளைகள், அரசவாரிசுகள் என்று அனைவரும் பெரும்பாலும் தங்கள் தந்தையிடமிருந்தே கற்றனர். (இன்றைய கல்விவசதி அவர்களுக்கு இல்லை)
இது அனைவருக்கும் பொருந்தியதாகவே இருந்தது. ஒரு பெரு வணிகனுடைய மகன் விவசாயம் செய்யவந்தால் அவனுக்கு அந்ததொழிலில் அனுபவமிருக்காது. அதனால் அதில் அவனுடைய வெற்றிவாய்ப்பும் குறைவே. இன்றைய நிலையில் இருக்கும் புத்தகங்கள் அவர்களுக்கு இருந்திருக்குமா என்பதும்சந்தேகமே.
பெண்கொடுக்கும் விஷத்திலும் இதுவே முறையானது. வணிகன் ஒருவனின் மகள் அரசகுடும்பத்தில் சென்றால் பணம் அதிகம் சம்பாதிப்பது ஒன்றே அவள்குறியாக இருக்குமே தவிர மக்கள்நலனில் எண்ணம் செல்லாது. அதனால் ஒரேதொழில் செய்யும் மக்களுக்குள் பெண்கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.
முதலில் இந்தமுறையில் மக்களுக்கு எளிமையாக இருப்பதற்காகவே சாதிகள் தோன்றின. பிறகு இதில் பலமாற்றங்கள் ஏற்பட்டு வலியவன் எளியோனை அடக்கி ஆள ஆரம்பித்தான்.
இன்று பலர்சொல்வது போல் தமிழர்கள் அனைவரும் முட்டாள்களாக இருந்ததாகவும், எங்கிருந்தோவந்தவர்கள் அவர்களை ஏமாற்றி விட்டதாகவும் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை.
சாதியின் இன்றைய நிலை: ராஜாஜி அவர்களின் குலவழிக்கல்வி மட்டும் இன்று தமிழ்நாட்டில் இருந்திருந்தால், நானெல்லாம் இன்று வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கமாட்டேன். எங்கோ மாடுமேய்த்துக் கொண்டிருப்பேன்.
கல்விகண் திறந்த கர்மவீரர் காமராஜரின் திட்டத்தால் அனைவருக்கும் கல்வி என்ற நிலை ஏற்பட்டது. பள்ளியில் அனைத்து சாதிமக்களும் இணைந்து பாடம் படிப்பதனால் அவரவர் தங்களின் சாதியின் அடையாளத்தை இழந்துவருகின்றனர்.
இன்று பல கலப்பு திருமணங்கள் நடக்கின்றன. சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் நான்பார்த்து பல காதல் திருமணங்களுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்தாலும் ஒருவழியாக இறுதியில் ஒத்துக்கொள்கின்றனர்.
கல்விமுறை மாறி 50 வருடங்கள்தான் ஆகிறது. ஓரளவு மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மையே. 2000 ஆண்டுகளாக ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடிதீர்வை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் வரும். பொறுத்திருங்கள் இன்னும் 50-100 ஆண்டுகளுக்குள் முற்றிலும் மாறிவிடும். ஏதோ என் அறிவிற்குட்பட்ட அளவிற்கு எழுதியிருக்கிறேன்.
மாற்றம் ஒன்றே நிலையானது….
-> ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் "சாதி" இந்துமதத்திற்கு உரியதல்ல! ஆகையால் சாதியைக் கழைந்து எறிவோம்.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.