ஈழத்தமிழர்களின் நலன் குறித்து மன்மோகன்சிங்கிடம் முறையிட்டாலும், ராஜபக்சேவிடம் முறையிட்டாலும் இரண்டும் ஒன்று தான் என பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
.சென்னையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:''வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை'' என்ற தலைப்பில் தமிழகத்தில் இருக்கும் 12,650 கிராமங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். இந்தபிரசாரம் வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக.,வுக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்திகொடுக்கும். டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை இப்பிரசாரம் நடைபெறும். இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்க தேவைப்படும் இரும்பு, நாட்டில் உள்ள விவசாயிகள் பயன் படுத்தி, தற்போது பயன்பாட்டில் இல்லாத இரும்புதுண்டுகளை சேகரித்து அவற்றை பாஜக. மண்டல மற்றும் மாவட்ட அலுவலகங்களில் சேகரித்துவைத்து பின்னர் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் டெல்லியில் இருக்கும் பாஜக தலைவர்களுக்கும், தமிழக மாநில பாஜக.வுக்கும் ஒரேநிலைபாடுதான். டெல்லியில் ஒருநிலைபாடு தமிழகத்தில் ஒருநிலைபாடு கிடையாது. இப்பிரச்னை தொடர்பாக அகில இந்திய தலைவர்களிடம் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டியது குறித்து, அகில இந்திய பாஜக . தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் எடுத்துரைப்போம். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாசார்பில் பிரதமர் மட்டுமில்லை, இந்தியாவில் இருந்து ஒருபியூன்கூட கலந்துகொள்ள கூடாது என்பதுதான் பா.ஜ.க வின் நிலை. இதுதொடர்பாக நாங்கள் பிரதமரிடம் நேரில் முறையிட விரும்பவில்லை. காரணம் மன்மோகன்சிங்கிடம் முறையிடுவதும், ராஜபக்சேவிடம் முறையிடுவதும் ஒன்றுதான். தமிழர் இன அழிப்பு நடத்திய விஷயத்தில் இருவரும் கூட்டு குற்றவாளிகள்தான். இவ்வாறு அவர் கூறினார்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.