ஐந்துமாநில சட்ட சபை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து வரும் 11ம்தேதி முதல் டிசம்பர் 4ம்தேதி வரை கருத்துக்கணிப்புகள் நடத்தி அவற்றின் முடிவை வெளியிடக் கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் இன்று தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
.
டெல்லி, ராஜஸ்தான், மபி, சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்துமாநிலங்களுக்கு சட்ட சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் ஏற்காடு சட்ட சபை தொகுதிக்கு டிசம்பர் 4ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
சட்ட சபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வேட்பாளர்களை பிடிக்கவில்லை என்றால், வாக்காளர்கள் அதுகுறித்த தங்கள் எண்ணத்தை பதிவுசெய்ய தற்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் புதியவசதி செய்யப்பட்டுள்ளது.
ஐந்துமாநில சட்ட சபை தேர்தலில், நான்குமாநிலத்தை பிஜேபி கைப்பற்றும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதனால் காங்கிரஸ்கட்சிக்கு கலக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கருத்து கணிப்புகளுக்கு தடைவிதிக்க கோரி காங்கிரஸ் கட்சி தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.
இந்நிலையில் தலைமைதேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவித்துள்ளது. வருகிறது 11ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4ம் தேதிவரை கருத்துக் கணிப்புகள் நடத்தவோ, அவற்றின் முடிவுகளை தொலை காட்சிகளோ, பத்திரிகைகளோ வெளியிடக் கூடாது என்று தலைமை தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.