பாட்னாவில் நரேந்திரமோடி கூட்டத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பண உதவிசெய்த தம்பதியை கைதுசெய்த மங்களூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பீகார்போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் .
சென்ற மாதம் 27ம் தேதி பீகார்தலைநகர் பாட்னாவில் நரேந்திரமோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் மேடைக்கு அருகே கூட்டம் நடப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன் குண்டுகள்வெடித்து 7பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியதில் இந்திய முஜாகிதீன் இயக்கத்தைசேர்ந்த தீவிரவாதிகளான இப்ராகிம், பப்பு, சேட்டு, மவுலித்சாயப், அன்சாரி கான் ஆகியோரை கைதுசெய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானில் இருந்து 5கோடி ஹவாலாபணம் மங்களூரில் உள்ள பெண் ஒருவரின்மூலமாக பெறப்பட்டிருப்பது தெரிந்தது. புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தியதில், அந்தபெண் ஆஷா என்கிற ஆயிஷாபானு என தெரியவந்தது.
கணவர் ஜூபேருடன் . மங்களூரில் குடியிருந்த இவர் தனது கணவருடன் சேர்ந்து ஹவாலா பறிமாற்றம் செய்துவந்தார். இந்நிலையில், இவரது கணக்கிற்கு 5 கோடி வந்துள்ளது. இதை அவர் வெவ்வேறுபெயர்களில் உள்ள வங்கிகணக்குகள் மூலமாக பாட்னா குண்டு வெடிப்பு தீவிரவாதிகளின் வங்கிகணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
இதை தொடர்ந்து மங்களூரில் பதுங்கியிருந்த ஆயிஷாபானு, ஜூபேரை போலீசார் கைதுசெய்தனர். இருவரையும் நேற்றுகாலை மங்களூர் 3வது கூடுதல் விரைவுநீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், இவர்களை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கும் படி, நீதிமன்றத்தில் பீகார் காவல்துறையின் அனுமதியைகேட்டனர். இதை ஏற்றுகொண்ட நீதிபதி, இருவரையும் பீகார்போலீசிடம் ஒப்படைக்கும்படி மங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து பீகார் காவல்துறையினர் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் பாட்னா அழைத்துச்சென்றனர்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.