நரேந்திர மோடியின் மீது ஆயிரம் அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை கூறினாலும், அவரை பிரதமர்வேட்பாளராக நிறுத்துவதை பற்றி பாஜக ஒருபோதும் மறுப பரிசீலனை செய்யாது என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார் .
குஜராத்தை சேர்ந்த இளம் பெண்ணை நரேந்திரமோடியின் உத்தரவின் பேரில் போலீசார் உளவுபார்த்ததாக ‘கோப்ரா போஸ்ட்’ என்ற புலனாய்வுபத்திரிகை தகவல் வெளியிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சரமான அமித்ஷா போலீஸ் அதிகாரி சிங்கால் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சிடி.யையும் அது வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று முன்தினம் கருத்துதெரிவித்த மத்தியசட்ட அமைச்சர் கபில் சிபல், ‘மோடி மீது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதால், அவரை பிரதமர்வேட்பாளராக நிறுத்துவதை பாஜக மறுபரிசீலனை செய்யக்கூடிய கட்டாயத்தை ஏற்படுத்துவோம்’ என்று கூறியிருந்தார்
இதற்க்கு பதில் தரும் விதமாக பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; மோடியின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்நெருங்கும் நேரத்தில், மோடிக்கு எதிராக இதை போன்ற அடிப்படையற்ற, அசிங்கமான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்ட விழ்த்துவிடும் என்று சந்தேகிப்பதாக ஏற்கனவே நாங்கள் கூறியிருக்கிறோம். அதன் படி, காங்கிரஸ் தனது அழுக்குப் பிடித்த தந்திரத்தை தொடங்கியுள்ளது.
மோடியின் மீது இதை போன்ற ஆயிரம் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறினாலும், அவரை பிரதமர்வேட்பாளராக நிறுத்துவதை பற்றி பா.ஜ.க ஒரு போதும் மறுபரிசீலனை செய்யாது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதைவிட்டு விட்டு, தனது பிரதமர்வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கூறவேண்டும்.
இளம்பெண்ணை உளவு பார்ப்பது தொடர்பாக அமித்ஷா தன்னிடம் பேசியதை ரகசியமாக பதிவுசெய்த சிடி ஆதாரத்தை சிபிஐ.யிடம் கொடுத்துவிட்டதாக போலீஸ் அதிகாரி சிங்கால் கூறியுள்ள நிலையில், கோப்ரா போஸ்ட்டுக்கு அது எப்படி கிடைத்தது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அதேநேரம், தாங்கள் வெளியிட்டுள்ள சிடி உண்மை நிலைபற்றி தங்களால் உறுதி அளிக்க முடியாது என்று அது கூறியிருக்கிறது. மேலும், மோடி தங்களுடைய குடும்பநண்பர் என்பதால், தனதுமகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி அவரை தாங்கள் கேட்டுகொண்டதாக பெண்ணின் தந்தை அறிக்கைவெளியிட்டு இருக்கிறார். ஒருமாநிலத்தின் முதல்வர் என்ற வகையில், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய கடமையும், பொறுப்பும் மோடிக்கு உள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.