நாடுமுழுவதும் மோடி அலை வீசுவதால், வரும் மக்களவைதேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதி என பாஜக மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு கூறியுள்ளார்.
பெங்களூர் அரண்மனை மைதானத்தில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; நமது நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசு எல்லா விஷயங்களிலும் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. மத்திய அரசு சாதனைகளை காட்டிலும் அதிகம் சோதனையில் தான் மக்களை ஆழ்த்தியது.
சீரான பொருளாதாரகொள்கை இல்லாததால், பண வீக்கம் ஏற்பட்டது. சமையல்காஸ் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியிருப்பதால் கல்வி, சுகாதாரம், தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதிசெய்வதிலும் சரியான கொள்கை பின்பற்றாததால், கோடிக் கணக்கான நிதி வீணாகிவருகிறது.
நாட்டில் ஜனநாயம் மலர்ந்தபிறகு 50 ஆண்டுகள் ஆட்சிநடத்திய காங்கிரஸ் கட்சியால் எந்த பலனுமில்லை. அந்தகட்சியின் ஆட்சியை விமர்சனம்செய்யும் எதிர்க் கட்சிகளுக்கு, சரியாக பதில்கொடுக்கும் திறன் கூட காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் விளையாட்டுபோட்டி உள்ளிட்ட இமாலய ஊழல்களில் காங்கிரஸ் சிக்கிசீரழிந்து வருகிறது.
10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் கொடுமையை பார்த்து வெறுத்துபோயிருக்கும் மக்கள், வரும் மக்களவை தேர்தலில் சரியானபாடம் புகட்ட தீர்மானித்துள்ளனர். அதற்கான உந்துசக்தியாக விளங்கும் நரேந்திரமோடி தலைமையில் புதிய ஆட்சியை அமைக்க மக்கள் தயாராகிவிட்டனர். நாடு முழுவதும் மோடி அலை பிரமாண்டமாக வீசிவருகிறது. குறிப்பாக, தென்மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகமாநிலங்களில் மொத்தமுள்ள 132 தொகுதிகளில் 60 சதவீத தொகுதிகளில் பாஜ வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை. என்று அவர் கூறினார்.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.