தெகல்கா ஆசிரியர் தருண்தேஜ்பாலை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி

 பாலியல் குற்றச் சாட்டிற்குள்ளான தெகல்கா ஆசிரியர் தருண்தேஜ்பாலை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து இணைய தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அருண் ஜேட்லி, இது வெளிப்படையான பாலியல் புகார். தேஜ்பாலை காப்பாற்ற காங்கிரஸ்கட்சி முயற்சி செய்கிறது . தேஜ்பாலை கைதுசெய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தருண்தேஜ்பால் நேர்மையான பத்திரிக்கை ஆசிரியர் இல்லையென்று முன்னாள் எம்பி ஜெயாஜேட்லி கூறியுள்ளார். அதனால் இந்தபுகாரை பற்றி தாம் ஆச்சரியப்படவில்லை , ரகசிய புலனாய்விற்காக அவர் விலைமாதரையே பயன் படுத்தி வந்தார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

தேஜ்பால் மீதான புகார்குறித்து தெகல்கா குழு விசாரணை நடத்திவருவதாக நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரி கூறியுள்ளார். அந்தப்பெண் பத்திரிக்கையாளர் கேட்டுக்கொண்டபடி ஆசிரியர் மன்னிப்புகோரி, பதவி விலகியுள்ளதாகவும் அவர்தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு நீதிகிடைக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.