மற்றவர்களின் நடத்தை மீது புகார்கூறி அரசியல் நடத்துவது காங்கிரசின் விளையாட்டு

 பாஜக.,வின் முன்னாள் தலைவர் நிதின்கட்காரி, பிடிஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்புபேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இளம்பெண் வேவுசர்ச்சை விவகாரத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. தங்கள்மீது குற்றம் சாட்டுவோரின் நடத்தை மீது புகார்கூறி அரசியல் நடத்துவது காங்கிரசின் விளையாட்டு ஆகிவிட்டது.

அது ராம்தேவாக இருந்தாலும், நரேந்திரமோடியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக அரசியல்விளையாட்டு விளையாடுவது காங்கிரசின் வாடிக்கை. இது நல்லஅரசியல் அல்ல. தற்போது காங்கிரஸ்கூட்டணி மூழ்கும் கப்பலைப் போல உள்ளது.

அந்த கப்பல் மூழ்கத் தொடங்குகிற போது, அதில் உள்ளவர்கள் நெருக்கடியில் உட்கார்ந்துகொண்டு இருக்க மாட்டார்கள் . ஜல சமாதியும் ஆக மாட்டார்கள். தண்ணீரானது அபாயகட்டத்தை தாண்டுகிற போது, கப்பலின் தலைவரிடம் வருத்தம்தெரிவித்து விட்டு அவர்கள் வெளியேறிவிடுவார்கள். அவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சிலகட்சிகள் எங்கள் கட்சியுடன் (கூட்டணி வைப்பதற்காக) தொடர்புகொண்டு வருகின்றன. வரும் பாராளுமன்றதேர்தலில் 175 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றுகிற போது, ஏற்கனவே மனவருத்தத்தில் எங்களைப்பிரிந்து சென்ற பல பழையகூட்டணி கட்சிகள் எங்கள் அணிக்கு மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளது.

ஆந்திரா, மேற்குவங்காளம், ஒடிசா, கேரளா, தமிழகம் உள்ளிட்டமாநிலங்களில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்றுகேட்கிறீர்கள். இந்த மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் எங்கள்கட்சி போட்டியிடும். புர்த்திகுழும நிதி முறைகேடு சர்ச்சையில் நான் ஏதும் அறியாதவன்.

அரசியல்சதியினால் நான் குற்றம் சாட்டப்பட்டேன். கடந்த ஓராண்டுகாலத்தில் எனக்கு எதிராக எந்தவொரு நோட்டீசும் கிடையாது. நடவடிக்கையும் இல்லை. என்மீது குற்றச்சாட்டும் கிடையாது. இவையெல்லாம் நான் அப்பாவி என்பதைகாட்டும்.

கட்சிக்கு என்னால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக் கூடாது என்று கருதித்தான் அப்போது நான் கட்சிதலைவர் பதவியை விட்டுவிலகினேன். நான் அப்பாவி. இந்தவிவகாரத்தில் கட்சியில் அனைவரும் ஒன்றாக இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

அந்தவிஷயத்தில் எனக்கு வருத்தம் உண்டு. இரண்டாவது முறை கட்சியின் தலைவராக முடிய வில்லை என்பதற்காக நான் ஓலமிட வில்லை. ஆனால் எனக்கு அதில்வேதனை உண்டு.

ஏனென்றால், நான் ஒருநேர்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தும், சமூக நலனுக்காக உழைத்து வந்தும் கூட, இந்த விவகாரத்தில் என்மீது ஊடகங்களில் ஒருபிரிவினர் கறுப்புசாயம் பூச முற்பட்டனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் என் மீது கூறிய குற்றச் சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டு விட்டன என்று நிதின் கட்காரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...