மோடியின் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் காங்கிரசும் அதன் ஆதரவு மீடியாக்களும் சில நாட்களுகளாக கூறிவருகிரது..அவை:-
1. இந்திய விடுதலைக்காக போராடிய ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவை குறிப்பிடும்போது அதே உச்சரிப்பை கொண்ட ஜனசங்கத்தின் ஸ்தாபகர் ஷியாம் பிரசாத் முகர்ஜியை தவறுதலாக் குறிப்பிட்டுவிட்டார் மோடி. என்பது….இது எவ்வளவு பெரிய கொலைபாதகம்..
2.ராஜஸ்தானின்..டூடூ என்னுமிடத்தில் பேசிய மோடி..மக்களை பார்த்து " நீங்கள் மகாத்மாவின் கனவை நிறைவ்ற்றுவீர்களா?–மோகன்லாலின் கனவை நிறைவ்ற்றுவீர்களா?"–என மோகந்தாசுக்கு பதிலாக மோகன்லால் என்று சொல்லிவிட்டார் என்பது..இது எவ்வளவு பெரிய தேசத்துரோகமல்லவா?
சபாஷ் மீடியாக்கலே..காங்கிரஸ்காரர்களே..உங்கள் குற்ற்ச்சாட்டுக்கள் சரிதான்..கண்டுபிடிப்புக்கள் அதைவிட சரிதான்..எவ்வளவு பெரிய குற்றங்கள் இவை?–எவ்வளவு பெரிய தேசதுரோகம் ?..
இதனால் நமது தேசத்துக்கு எத்தனை லட்சம் கோடி ரூபாய் இழப்பு..இதனால் மோடிக்கு எத்தனை லட்சம் கோடி ரூபாய் சொத்து கூடுகிறது..அடப்பாவிகளா..உங்களின் கண்டுபிடிப்பு எவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது..
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்..மோடி மிகச்சிறந்த உணர்வு பூர்வமான பேச்சாளர்..மிகவேகமாகவும் பேசுவார்..இதில் ஏற்பட்ட எழுத்துப்பிழை…இதை தேடிக்கண்டு பிடிக்கும் அளவுக்கு—-காங்கிரசாருக்கு வேறு வேலை இல்லை என்பதும்..மோடியின் மீது வேறு குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதும்,..மோடியை "பூதக்கண்ணாடி " போட்டு பார்ப்பதே காங்கிரசாரின் வேலை என்பதும் தெளிவாக தெரிகிறது.
இதற்குமேல் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், "பொது அறிவுக்காக" சில வரிகள்..
ஷியாம் பிரசாத் முகர்ஜியை— ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவுக்கு பதிலாக உச்சரித்த உடனேயே திரும்ப மேடைக்கு வந்து,மோடி வருத்தம் தெரிவித்து, தன் தவறை திருத்திக்கொண்டதை ஏன் மீடியாக்கள் மறைக்கின்றன..மீடியாக்களின் இந்த உள்நோக்கம் "வெளிப்படை"-யாக தெரிகிறதல்லவா –
அந்தக்காலத்தில் ரிலையன்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தது நம் ஆடிட்டர் திரு.எஸ் குருமூர்த்தி அவர்கள்தான்..அத்ற்காக சி.பி.ஐ. வைத்து மிரட்டி கைது செய்யமுயன்றது ராஜீவ் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு..எனவே குருமூர்த்தி எனறால் ராஜீவ் காந்திக்கு சிம்மசொப்பனமாக இருந்தகாலம் அது..
அச்சமயம் சென்னைக்கு விடுதலை போராட்ட வீரர் அமரர்.சத்திய மூர்த்தி அவர்கள் சிலையை திறந்துவைக்க ராஜீவ் வந்திருந்தார்..அவரது பேச்சின் ஒவ்வொரு பகுதியிலும் அமரர்.சத்திய மூர்த்தியை கூரிப்பிடுவதற்கு பதிலாக "குருமூர்த்தி…குருமூர்த்தி.." என்றே குறிப்பிட்டடார்..அந்த அளவுக்கு ராஜிவ் மனதில் நம் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி அவர்கள் சிம்மசொப்பனமாக விளங்கினார்..
இதை அன்றைய மீடியாக்கள் பெரிது படுத்தவில்லை..காரணம் ராஜீவை எதிர்க்கும் தையிரியம் அவர்களிடம் அன்று இல்லை..
மூன்றாவதாக..குஜராத் பெண் ஒருவரை மோடி அரசு ரகசியமாக கண்காணித்தது..எனபது.
.குஜராத்தின் உயர் அரசு அதிகாரி..காங்கிரசின் ஆதரவாளர்..அப்பெண்ணை பலவந்தப்படுத்த பின் தொடர்ந்தார்..அப்பெண்ணின் தந்தை மற்றும் அப்பெண்ணின் வேண்டுகோளின் படி அவர்களுக்கு மோடி பாதுகாப்பு அளித்தார்….
முதலில் மோடி மீது குற்றம் சுமத்திய காங்கிரஸ் இப்போது அமைதியானது ஏன்?–உண்மை வெளியே தெரிந்ததால் எற்பட்ட பயம்.அது…
இம்மாதிரி குற்றச்சாட்டுக்கள் இனி காங்கிரஸ் மற்றும் அதன் அதரவு மீடியாக்களால். தொடர்ந்து எழுப்பப்படும்..இதில் ஆச்சரியம் இல்லை..இவை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்..அப்போதுதான் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் ஆதரவாளர்களும்
மோடியின் பக்கம் கூண்டோடு வந்துவிடுவார்கள்..
2011 இல் கம்யூனிஸ்டுகள் இல்லாத பாரதம் உருவானது,,35 ஆண்டுகால மார்க்ஸ்சியத்துக்கு மேற்கு வங்கமும், கேரளமும் "குட் பை" சொல்லிவிட்டது..
2014 இல் காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாக வேண்டும்..ஆங்கிலேயன் ஆரம்பித்த அக்கட்சியை இத்தாலிக்காரி முடித்து வைப்பார்..அதற்கு மோடி மீது இம்மாதிரி குற்றச்சாட்டுக்கள் அவசியம்..வரவேற்போம்..
காங்கிரசை வேரறுப்போம்….
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.