மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26-ம்தேதி லஷ்கர் இதொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 160-க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றனர். இதன் 5ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி இதுகுறித்து கூறியதாவது :-
மும்பையில் தாக்குதல்நடத்திய உண்மையான குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்தாமல் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது பெரும் ஏமாற்றம் தருகிறது . பாதுகாப்பான, வலிமையான இந்தியாவை உருவாக்க தீர்மானமான நடவடிக்கை எடுக்கவேண்டிய சரியானதருணம் இது.
மும்பைசந்தித்த இந்த அதிபயங்கர தாக்குதல் இந்திய பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை நினைவூட்டுகிறது. மும்பைதாக்குதலில் சொந்தங்களின் உயிரை தியாகம்செய்தது வீண்போகாது என்பதை அவர்களுடைய குடும்பங்களுக்கு நாம் உறுதிபடுத்த வேண்டும்.
இந்த கோழைத்தனமான தாக்குதலில், உயிர்களை இழந்துவாடும் உறவினர்களுடன் நானும் சோகங்களை பகிர்ந்து கொள்கிறேன். தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு நாட்டுக்காக உயிர்தியாகம் செய்துள்ள நமது வீரர்களை இந்த தருணத்தில் நாம்வணங்குவோம் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான இத்தாக்குதலில் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சல்யூட். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.