இலங்கை இனப் படுகொலையில், பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தார்மீகப்பொறுப்பு உண்டு இனப் படுகொலைக்கு ராஜபக்சே 100 சதவீதபொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 50 சதவீத தார்மீகபொறுப்பு உண்டு.என்று தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது , இலங்கை தமிழர் விவகாரத்தில் பா.ஜ.க மீது ப.சிதம்பரம் திடீரென்று குற்றம்சுமத்தி உள்ளார். இது காலம்கடந்து ஏற்பட்ட ஞானோதயம்.
அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதம்வழங்கினால் அது எப்படி இந்தியாவுக்கு எதிராகதிரும்புமோ அதேபோல் இலங்கை அரசுக்குகொடுக்கும் ஆயுதங்கள் தமிழர்கள் மீதுபாயும் என்பதை பாஜக. உணர்ந்து இருந்தது.
எனவேதான் இலங்கை அரசு ஆயுதம்கேட்டபோது தர மறுத்ததோடு இலங்கை வீரர்களின் ஆயுதபயிற்சிக்கும் தார்மீக ஆதரவு தரமறுத்தவர் வாஜ்பாய் என்பது நாட்டுமக்களுக்கு தெரியும்.
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு வெறும்நாடகம். இதனால் பயன்பெறபோவது ராஜபக்சே. இன்னல்களுக்கு ஆளாகப்போவது தமிழர்கள் என்பதால் காமன்வெல்த்மாநாட்டை எதிர்த்தது பா.ஜ.க.
இங்கிலாந்து பிரதமர் கேமரூனின் அடிப்படைதைரியம் கூட மன்மோகன்சிங்குக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இனியும் இந்தபிரச்சினையில் காங்கிரஸ் போடும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.
இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு ராஜபக்சே 100 சதவீதபொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 50 சதவீத தார்மீகபொறுப்பு உண்டு.
மத்திய அமைச்சரவையில் அங்கம்வகிக்கும் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்புண்டு என்பதை அவர் உணர வேண்டும். காலம்கடந்து உண்மைகளை மறைக்க குற்றம் சுமத்துவதை தவிர்க்கவேண்டும் என்றார் அவர்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.