ஊழல் செய்வது சரி , உளவு பார்ப்பது தவறு

 ஊழல் செய்வது சரி , உளவு பார்ப்பது தவறு. பயங்கரவாதிகள் எத்தனை அப்பாவிகளை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்ள்ளலாம், ஆனால் நாம் அவர்களை பாதுகாக்க வேண்டும், இந்திய எல்லைக்குள் திட்டமிட்டு ஊடுருவும் பாகிஸ்தான் , சீன இராணுவத்துக்கு பாதுகாப்பு உண்டு , தட்டு தடுமாறி தவறுதலாக எல்லையை தாண்டும் இந்திய மீனவனின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை, இப்படியே நீள்கிறது ஆளும் காங்கிரஸின் எழுதப்படாத நியதி!.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முன்னால் குஜராத் அமைச்சர் அமித் ஷா மூலம் கடந்த 2009–ம் ஆண்டு அந்த மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை போலீசார் மூலம் உளவு பார்த்ததாகவும் . இது தொடர்பாக அமித் ஷாவுக்கும், ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.எல்.சிங்காலுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாகவும், அது ரகசியமாக பதிவு செய்யப்பட்டு கோப்ரா போஸ்ட் , குலைல் உள்ளிட்ட புலனாய்வு இணையதள ஊடகங்களில் வெளியாகியிருப்பதாகவும் தவல்கள் தெரிவிக்கின்றன

இந்த தொலைபேசி உரையாடல் ஒலிநாடாவை இணைய ஊடகத்துக்கு தந்தவர் குஜராத்தில் ஊழல் குற்றச்சாட்டில் பதவியிழந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா , இதை வெளியிட்ட இணைய பத்திரிக்கை குலைலுக்கு செய்திகளைக் கொடுத்து வருபவர் ஆசிஸ் கேத்தான் என்பவர் . இந்த ஆசிஸ் கேத்தான் காங்கிரசின் ஆசி பெற்ற தெஹல்கா பத்திரிக்கையின் முந்தைய ஆள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் 2002 கலவர விசயங்களைப் பற்றி அதிரடியாக "பொய்-மெய் கலந்து குழப்பமான" வீடீயோக்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்பியவர். பிறகு இந்த வீடியோ பொய் என்று வெளிவுலகுக்கு தெரிந்தவுடன் சிறிது காலம் காணாமல் போயிருந்தவர். இப்போது தேர்தல் நெருங்கி வருவதால் யாருக்கோ சகாயம் செய்ய இப்போது கிளம்பியுள்ளார்.

ஒரு அரசு நாட்டின் அன்றாட பாதுகாப்புக்காக உளவு வேளைகளில் ஈடுபடுவது ஒன்றும் தவறில்லை. அப்படி தவறென்றால் உளவுத்துறை என்ற சட்டத்தால் அங்கிகரிக்கப்பட்ட அமைப்பு மட்டும் சரியாகுமா?. குற்றவாளிகளின் மத்தியில் ஆண் பெண் பேதங்கள் உண்டா. உளவு என்பதே சந்தேகப்படும் நபர்கள் மீதான குற்றத்தை உறுதி படுத்துவது தானே.

முதல் இரண்டாம் உலகப்போரில் உளவு பார்த்து பலாயிரம் வீரர்களை பரலோகம் அனுப்பிய அழகிகளையும் , அவர்களை உளவு பார்த்து கைது செய்து சிரைச்சேதம் செய்த கதைகளும் நாம் அறிந்ததே.

மாடா ஹரி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இவருடைய இயற்பெயர் மார்கரீதா கீர்துரிடா, நெதலாந்து நாட்டுக்காரி உளவு வேலைகளில் இறங்கினார்.

முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இவருக்கு நிறைய ரசிகர்கள். யுத்தக் களத்தில் பலர் புரள, இவருடைய வலையில் பலரும் விழுந்தனர் . அந்த பட்டியலில் இராணுவத்தினர், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுடன் என பலரும் உண்டு. எல்லோரிடமும் விஷயத்தைக் கறந்தார். அதை அப்படியே பிரான்ஸ்க்கு அனுப்பினார்.

கடைசியில் 1917 பிப்ரவரி 13ம்நாள் பாரீஸில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். "நான் பிரான்ஸ் உளவாளிதான்" என மாடா சொன்னார். ஆனால் பிரான்ஸ் அதை மறுத்து "இவர் ஜெர்மன் உளவாளி" என பிளேட்டைத் திருப்பிப் போட்டது. ஜெர்மனிக்கு உளவு வேலை பார்த்ததாகவும், 50,000 படை வீரர்களின் சாவுக்குக் காரணமாய் இருந்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சுட்டும் விழிச் சுடர் கடைசியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எடித் கிராவெல் என்றொரு உளவாளி இருந்தார். ஜெர்மன் நாட்டுக்காரியான இவர் இங்கிலாந்துக்கு உளவு வேலை பார்த்ததாகச் சொல்லி இவர் கைதானார். அவர் பார்த்து வந்ததோ யாரும் சந்தேகப்பட முடியாத நர்ஸ் வேலை. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இவர் 1915 அக்டோபர் 15ம் தியதி மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

அமெரிக்க உளவாளிகள் விர்ஜினியா ஹால், மரியா குளோ விச், இங்கிலாந்து உளவாளிகள் பிரின்சஸ் நூர், வயலட் ரெனி எலிசபெத் புஷ்ஷெல், இத்தாலிய உளவாளி பார்பெரா லாவெர்ஸ், பிரான்ஸ் உளவாளி ஏமி எலிசபெத் தோர்பே போன்றவர்கள் இந்த உளவு வேலைப் பிரபலங்கள். உளவாளிகள் பட்டியல் இத்துடன் தீர்ந்து விடவில்லை ஜூலியா மெக்வில்லியம்ஸ், மர்லேன், மெக்கிண்டோஷ், மேரி லூயிஸ், நான்சி கிரேஸ் என நீளும் இந்தப் பட்டியல் ரொம்பவே பெருசு. உலகப் போர் வரலாற்றில் பெண் உளவாளிகள் எந்த அளவுக்கு பரவியிருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறிய அறிமுகமாக இதைக் கொள்ளலாம்.

இப்படியாக உளவு வேலை பார்த்தவர்களை உளவு பார்த்துதான் பிடித்தார்கள். ஏன் சமீபத்தில் இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில், இரண்டாவது நிலை செயலர் அதிகாரியாக பணியில் இருந்த மாதுரி குப்தா எனும் 53 வயது பெண் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளியிடம் இந்திய அரசு குறித்த பலதகவல்களை தந்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்டார். இத்தனைக்கும் அவரை இரண்டு வருடம் உளவு பார்த்து உறுதி படுத்திக்கொண்டே கைது செய்தார்கள். பெண் என்றும் பாராமல் மாதுரி குப்தாவை உளவு பார்த்தவர்களை பிடித்து உள்ளே தள்ளிவிடலமா?.

இருப்பினும் குஜராத் காவல்துறை உளவு பார்த்ததாக கூறப்படுபவர் உளவாளி என்று கூறவில்லை, ஒரு அரசு மக்களின் பாதுகாப்பு மற்றும் அரசின் பாதுகாப்பான நிர்வாகத்திற்காக தினம் தினம் எத்தனையோ நபர்களை உளவு பார்த்து அவர்களது உண்மை தன்மையை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது . மேலும் சம்மந்தப்பட்ட அந்த பெண்ணோ அவரது குடும்பமோ பிரச்னை ஒன்றும் இல்லை இதை பெரிது படுத்த வேண்டாம் என்று அமைதி காக்கும் போது ஊழல் அதிகாரிகளும் , காங்கிரஸ்க்கு எதிரான எண்ண ஓட்டம் உடையவர்களை மட்டுமே குறிவைக்கும் பத்திரிக்கைகளும் கதறுவதுதான் வேடிக்கை,

தங்களது ஊழல் , விலைவாசி உயர்வு மற்றும் மோசமான நிர்வாகத்திளிருந்து மக்களின் கவனத்தை திசைத்திருப்ப இதைப்போன்ற கீழ்த்தரமான செயல்களில் காங்கிரஸ் இறங்கலாம், ஆனால் காங்கிரசை மீண்டும் ஆட்சியில்

அமர்த்துவதற்க்கான கீழ்த்தரமான திசைக்கு மக்கள் பயனிக்கமாட்டார்கள் என்பதே உண்மை.

தமிழ்தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...