தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் முடிவு செய்ய வில்லை என பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் நிருபர்களுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தந்த பேட்டியில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தில் கூட்டணிகுறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை. தேசப்பற்றுடன் தேசத்தில் ஒற்றுமை வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழருவிமணியன் அனைத்துத் தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
குஜராத்தில் சர்தார் வல்லபாய்படேலுக்கு, உலகிலேயே அதிக உயரமான சிலை அமைக்க, நரேந்திரமோடி தலைமையிலான அரசு முடிவுசெய்துள்ளது. அதற்காக தேசிய அளவில் அனைத்து தரப்புமக்களின் ஆதரவுடன் இரும்புசேகரிக்கும் பணி நடக்கிறது. இதை விளக்கி, 'வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை'என்ற பெயரில், கிராமங்கல் தோரும் யாத்திரை நடத்தியுள்ளோம். சர்தார் வல்லபாய்படேல் சிலைக்கான முக்கியத்துவத்தை உணர்த்த, வரும் 15ம் தேதி நாடுமுழுவதும் ஒற்றுமை ஓட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக. மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கூறும்போது, ''தமிழகத்தில் 64 இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடக்கும். சென்னையில் கண்ணகிசிலை முதல் கலங்கரை விளக்கம்வரை ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஓடமுடியாதவர்கள் நடக்கலாம்'' என்றார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.