பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை , மோடி ஒன்றும் தீண்டத்தகாதவர் அல்ல என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி.தெரிவித்துள்ளார்.
வரும் 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் முக்கிய அரசியல்திருப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி. தலைநகர் தில்லியில் முக்கியஸ்தர்கள், அரசியல்கட்சியினர், நண்பர்களை சந்தித்து ஆதரவுதிரட்டி வரும் ஜகன் மோகன், பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும், மோடி ஒன்றும் தீண்டத்தகாதவர் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மோடிகுறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜகன், ஏன்கூடாது? யாருமே தீண்டத்தகாதவர்கள் அல்ல . மோடியுடன் தொடர்பு வைத்துக்கொள்ள நாங்கள் தயார். எங்கள் கோரிக்கைகளையும் எங்களையும் ஏற்கும் யாருடனும் நாங்கள் தொடர்புவைத்துக் கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே வரும் 2014ம்_ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்ள, புதியகட்சிகளை தங்கள் தேசியஜனநாயகக் கூட்டணியில் இணைத்து பெரியவெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜகன்மோகனின் இந்த நிலைப்பாடும், காங்கிரஸுக்கு எதிராக அவர் திரட்டிவரும் ஆதரவு பாஜக கூட்டணிக்கு வலு சேர்க்கும் விதமாக அமைய உள்ளது.மேலும் மோடியுடன் கைகோக்க ஆந்திர மாநிலத்தின் முன்னாள் தேஜ.கூட்டணி உறுப்பினரான சந்திர பாபு நாயுடுவும் தயாராகிவருகிறார். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பேரணி பொதுக் கூட்டத்தில், மோடியுடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட நாயுடு, குஜராத் வளர்ச்சி பணிகளையும் மோடியையும் பாராட்டியுள்ளார் . மோடியின் தலைமைப் பண்பும், நிர்வாகத் திறமையும் தன்னைக் கவர்ந்திருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே தெலுங்குதேச கட்சித்தலைவர் சந்திபாபுவை சந்தித்து, அவர் மோடியுடன் உறவுகொள்வதை தான் எதிர்க்கவில்லை என்று ஜகன் மோகன் தெரிவித்துள்ளார். எனவே ஆந்திரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் பாஜக என்ற வழுவான புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.