மத்திய அரசு கொண்டுவந்துள்ள தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படும் போது அதற்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என பாஜ தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரகாஷ் ஜாவேத்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவை பிரித்து தெலங்கானா புதியமாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தெலங்கானா மசோதா உருவாக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்குபின்னர் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து ஆந்திர சட்ட சபையின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று சட்ட சபையில் தெலங்கானா மசோதா குறித்து விவாதம் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதா தாக்கல்செய்யப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
தெலங்கானா மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பிஜு ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சி தலைவர்களை சந்தித்து தனது நிலைபாட்டுக்கு ஆதரவுகேட்டார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும் அண்மையில் சந்தித்தார். அப்போது பாஜக தரப்பில் உறுதியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தெலங்கானா மசோதாவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என பாஜ செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:மக்களவை தேர்தலுக்கு முன்பாக தெலங்கானாமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தெலங்கானா விவகாரத்தை காங்கிரஸ் வாக்குவாங்கி அரசியல் ஆக்கிவிட்டது. சீமாந்திரா மக்களின் ஒப்புதலைபெறாத, அவர்களது நலனை பாதுகாக்காத தெலங்கானா மசோதாவுக்கு பாஜக ஆதரவு அளிக்காது. மாநிலங்களை எப்படிபிரிக்க வேண்டும் என்பதை வாஜ்பாய் செய்துகாட்டினார். எப்படி பிரிக்கக் கூடாது என்பதை காங்கிரஸ் செய்துவருகிறது. இவ்வாறு ஜாவேத்கர் கூறினார். இதேகருத்தை டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கும் தெரிவித்தார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், தெலங்கானா மக்களும், சீமாந்திரா மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த பிரச்னைக்கு தீர்வுகாணப்படும் என்றார்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.