மகா கர்ஜனை பேரணியில் கலந்துகொள்ள 1 கோடி இளைஞர்களுக்கு எஸ்எம்எஸ்

 பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்துகொள்ளும் ‘மகா கர்ஜனை’ பேரணி 22ந் தேதி மும்பையில் நடக்கிறது. இந்தபேரணியில் அதிக அளவு மாணவர்கள் மற்றும் இளைஞர்களை திரட்டுவதற்காக மும்பை பா.ஜ.க சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதற்காக பா.ஜ.க சமூக ஊடககுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழு சமூக வலைதளங்கள், செல்போன் போன்ற தகவல் தொழில்நுட்பம் மூலமாக இளைஞர்களிடையே பிரசாரம்செய்ய அதிக ஆர்வம்காட்டி வருகிறது.

இதன் ஒருபகுதியாக நரேந்திரமோடியின் கூட்டத்திற்கு வருகைதர மும்பையில்வாழும் ஒவ்வொரு தனிநபருக்கும் செல்போன் மூலமாக எஸ்எம்எஸ். அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த குழு ‘மகாகர்ஜனை’ பேரணியில் கலந்துகொள்ள இதுவரை 1 கோடி இளைஞர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ். மூலமாக அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல் இமெயில் மூலமாக 2கோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தபேரணியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பா.ஜ.க வெளியிட்டுள்ள ஒருகுறிப்பிட்ட எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து பதிவுசெய்து வருகின்றனர்.

இது வரை சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம்பேர் மிஸ்டுகால் கொடுத்து பேரணியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சுமார் 37 ஆயிரம்பேர் இணையதளத்தில் பேரணியில் பங்கேற்க பதிவுசெய்துள்ளனர்.

இதுபோன்ற சமூக வலைதளமான பேஸ்புக்கில் 19 வீடியோ காட்சிகள் இந்த பேரணியில் இளைஞர்கள் பங்குபெற அழைப்புவிடுக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப், டிவிட்டர், யூடியூப் போன்றவற்றிலும் 360 வீடியோ காட்சிகள் பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவருகின்றன.இந்த தகவல் பா.ஜ.க சமூக ஊடககுழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...