தார் பாலை வனத்தின் மத்தியில் உள்ள பிகானீரில் 270 ஹெக்டர் தரிசுநிலங்களை வெறும் 2 கோடியே 83 லட்ச ரூபாய்க்கு ராபர்ட்வதேராவின் கம்பெனிகள் சட்ட விரோதமாக வாங்கி குவித்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் சட்ட விரோதமாக சொத்துக்கள்வாங்கி குவித்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரியானாவில் பரிதாபாத் எம்எல்ஏ. மகேஷ் நாகர் பெயரில் ராபர்ட்வதேராவின் கம்பெனிக்கு சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது குறித்து மத்தியில் பரபரப்பாகபேசப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தின் மத்தியில் உள்ள பிகானீரில் 270 ஹெக்டர் தரிசுநிலங்களை வெறும் 2 கோடியே 83 லட்ச ரூபாய்க்கு ராபர்ட்வதேராவின் கம்பெனிகள் சட்ட விரோதமாக வாங்கிகுவித்துள்ளது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று பாஜக.,வின் எம்பி.க்கள் குழு, முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மிககுறைந்த விலைக்கு வாங்கப்பட்ட அந்த பகுதி இப்போது சூரியசக்தி மண்டலமாக மாற்றப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து அந்த நிலங்களை அதிகவிலைக்கு கம்பெனிகளுக்கு விற்று வருவதாகவும் பாஜக எம்பி.க்கள் கூறியுள்ளனர்.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.