மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தில்லிபிரதேச ஆம் ஆத்மி அரசை கண்டித்து ஜனவரி 27-ஆம்தேதி முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுவேன்’ என்று அக் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி தெரிவித்துள்ளார் .
காங்கிரஸிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த வினோத் குமார் பின்னி, தில்லியில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இன்னிலையில் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து ஆம் ஆத்மி விலகிச் சென்று விட்டதாக புதன் கிழமை அவர் குற்றம் சாட்டியிருந்தார். வியாழக் கிழமை இதுதொடர்பாக மேலும் பல விவரங்களை தெரிவிப்பதாக கூறியிருந்த அவர், அதன்படி தில்லி செய்தியாளர்களை வியாழக் கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளும் ஆட்சி அமைந்தபிறகு ஆம் ஆத்மிகட்சி நிறைவேற்றாமல் விலகிச்சென்று கொண்டிருக்கிறது. தேர்தலின் போது குடிநீர், மின்கட்டண விஷயத்தில் அளித்த வாக்குறுதிகளும் முறையாக நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸýக்கும் பா.ஜ.க.,வுக்கும் எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திய கேஜரிவாலின் தற்போதைய செயல்பாடு முரண்பாடாக உள்ளது. தில்லிமுதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் காங்கிரஸ் எம்பி. சந்தீப் தீட்சித்துக்கும் இடையே நெருக்கம் இருப்பதாக எனக்குத்தகவல்கள் கிடைத்தன.
இதனால் தான் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் உத்தரவுக்கு ஏற்ப ஆம் ஆத்மியில் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. “எந்த அரசியல்கட்சியுடனும் கூட்டணி கிடையாது. ஆட்சி அமைக்கவும் ஆதரவும் கிடையாது’ என்று முதலில் அறிவித்துவிட்டு, பிறகு முடிவை மாற்றிக்கொண்டதற்கான காரணம் என்ன? கட்சியின் எல்லா முடிவுகளும் நான்கு சுவர்களுக்குள்தான் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகின்றன. மின்சாரவாக்குறுதியில் தில்லி மக்களை ஆம் ஆத்மி அரசு ஏமாற்றிவிட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும் 700 லிட்டர் குடிநீரை இலவசமாகதருவதாக தேர்தலின் போது கூறியது. தற்போது குறிப்பிட்ட அளவு தண்ணீருக்கு மேலாக பயன் படுத்தினால் முழுத்தொகையையும் செலுத்தவேண்டும் என சாதுர்யமாக அறிவிப்பு செய்துள்ளது.
விஐபி கலாசாரத்தை பின்பற்றமாட்டோம் என்று கூறிய அமைச்சர்கள் தற்போது விஐபி. பதிவு எண்களுடன் கூடிய காரில் வலம்வருகின்றனர். பெரியபங்களாவிலும் தங்கியுள்ளனர். விஐபி. கலாசாரத்திற்கு எதிரானவர்களாக இருந்தால் ஏன் கார்களைப் பயன் படுத்த வேண்டும்? இது போன்று பல்வேறு பிரச்னைகளிலும் ஆம் ஆத்மிகட்சி மக்களை திசைதிருப்புகிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கும் தற்போது அரசின் செயல்பாட்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
இதையெல்லாம் நான் கேள்வி எழுப்பினால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட கட்சி டிக்கெட் தராததால் நான் பிரச்னை கிளப்புவதாகக் கூறுகின்றனர். அமைச்சர் பதவியை மறுத்தவன் நான். ஆனால், அரவிந்த் கேஜரிவாலோ என்னை பேராசைக்காரன் என்கிறார்.
“சர்வாதிகாரியாக மாறிவிட்டார் கேஜரிவால்’: ஆட்சி அமைத்ததற்கு முதல் நாளில் துணை நிலை ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட அமைச்சர்கள் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருந்தது. நான் அமைச்சராக விரும்பவில்லை என்று அவரிடம் (கேஜரிவால்) கூறினேன். தற்போது மக்கள் பிரச்னைகளை முன்வைப்பதால் என்னைப் பேராசைக்காரன் என்று கூறுகிறார். அவர் ஒரு சர்வாதிகாரியாக மாறிவிட்டார். தில்லி மக்களை முட்டாளாக்கும் செயலை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். கட்சியின் அனைத்து முடிவுகளையும் நான்கு, ஐந்து பேர் மட்டுமே எடுக்கின்ற நிலை உள்ளது. தனக்கு எதிராக கருத்துகளை யார் முன்வைத்தாலும் கேஜரிவால் அதை விரும்புவதில்லை.
ஆம் ஆத்மி ஒரு சந்தர்ப்பவாத கட்சியாகிவிட்டது. கட்சியின் கொள்கைகள் ஆட்சிக்கு வந்த பிறகு மாறிவிட்டன; விருப்பத்துக்குப் பயன்படுத்தி வீசி எறியும் பொருள்போல, முதலில் அண்ணா ஹசாரேவையும் கிரண் பேடியையும் பயன்படுத்தினர். கட்சியில் பலரும் இதுபோன்று சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 27-ஆம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் பட்டினிப் போராட்டம் நடத்துவேன். குறிப்பாக, ஜனவரி 25 அல்லது 26-ஆம் தேதிக்குள் அண்ணா ஹசாரேவின் கோரிக்கையான ஜனலோக்பால் சட்ட மசோதாவை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மகளிர் அதிரடிப் படையையும் உருவாக்க வேண்டும் என்றார் வினோத்குமார் பின்னி.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.