அரசு பொறுப்பேற்றபிறகு தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் விதம், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் வழிக்கு இட்டுச் செல்வதை எடுத்துக் காட்டியுள்ளது. தில்லி தலைமை செயலகத்தில் நிர்வாகத்தை கவனிப்பதை விடுத்து, வீதிக்குவந்து போராட்டம் நடத்த முயல்வது ஏன், என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளதாவது:
சோதனை என்ற பெயரில், தில்லிபிரதேச சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, ஆப்பிரிக்க நாட்டவர்களிடம் நடந்து கொண்ட விதம் சரியல்ல. தலை நகரில் தங்கியுள்ள ஆப்பிரிக்கருக்கு சோம்நாத்பார்தி, தீவிரமான பிரச்னைகளை உருவாக்கியுள்ளார். அவருடைய அணுகு முறை இனவெறி போன்ற செயலாகத் தோன்றகிறது. சிலதினங்களாக ஆம் ஆத்மியின் செயல்பாடுகளே அக்கட்சியை பாதிக்கச் செய்வதாக இருக்கிறது. சிலபோலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம்செய்ய வேண்டும் என்று கோரி தில்லி முதல்வர் அரவிந்த்கேஜரிவால் தர்னா நடத்தத் திட்டமிட்டிருப்பதும் ஒரு சதிதான். தில்லி தலைமைச் செயலகத்தில் இருந்து நிர்வாகத்தை கவனிப்பதை விட, ஆம் ஆத்மிக்கு தர்னா நடத்துவது தான் வசதியாக இருக்கிறது போலும்.
அரசு பொறுப்பேற்றபிறகு தலைமை செயலகத்தில் அக்கட்சி செயல்பட்டு வரும் விதம், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் வழிக்கு இட்டுச் செல்வதை எடுத்துக் காட்டியுள்ளது. காங்கிரசுடனான வெளிப்படைத் தன்மையில்லாத உறவைத் துண்டிப்பதற்காகத் தான் தர்னாவா? அல்லது அரசை விட்டு வெளியேறி வீதியில் இறங்கிப்போராட ஆம் ஆத்மிகட்சி நினைக்கிறதா? நாடு முழுவதும் உள்ள தனது கட்சித் தொண்டர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் தில்லியில் ஆம் ஆத்மி அரசை அமைத்தது. ஆனால், இதன்செயல்பாடுகள் நாளுக்குநாள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. போராட்டம் நடத்துவது என்பது வேறு, ஒருகட்சியை உருவாக்கி, ஆட்சி நடத்துவது என்பது வேறு என்று அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.