பா.ம.க, ம.தி.மு.க.,வுடன் வியாழக் கிழமை முதல் அதிகாரப்பூர்வ பேச்சு நடைபெறவுள்ளது என்றும் பாஜக ஆட்சிக்குவந்தால் இலங்கைத் தமிழர் நலனை உறுதியாகப் பாதுகாப்போம். தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க உத்தரவாதம் பெற்றுத் தருவோம் என்றும் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
தமிழகத்தில் வங்கிகள்மூலமாக கடன் பெற்று விவசாயிகள் வாங்கிய டிராக்டர்களை அதிகாரிகள் ஜப்திசெய்து வருகின்றனர். பணம்கட்டாததால் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றஞ் சாட்டுகின்றனர். சென்னையை தவிர பிறமாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிராக்டர்களை ஜப்திசெய்வது தவறான நடைமுறை.
தமிழகம் கடுமையான வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளதால் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும். தில்லியில் ஆளும் தகுதியை முதல்வர்கெஜ்ஜரிவால் இழந்துவிட்டார். இந்தியாவின் இதயம்போன்ற புதுதில்லியில் காவல்துறை, மத்திய உள் துறையின் கீழ் தான் இருக்கவேண்டும். மக்களவைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர ம.தி.மு.க, பா.ம.க.,வுடன் வியாழக் கிழமை முதல் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதற்காக, பா.ஜ.க தேசியசெயலர் முரளிதர ராவ் சென்னை வருகிறார். இப்போதைய நிலையில் மதிமுக, இந்தியஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொங்கு நாடு தேசிய மக்கள்கட்சியும் கூட்டணியில் இணைவதாக உறுதி அளித்துள்ளது. தேமுதிகவுடன் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்குவந்தால் இலங்கைத் தமிழர் நலனை உறுதியாகப் பாதுகாப்போம். தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க உத்தரவாதம் பெற்றுத் தருவோம் என்றார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.