வேலியில் இருந்த ஓணானை மடியில்கட்டி கொண்ட நிலைதான் காங்கிரசின் நிலை

 காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி தடுமாறி கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியோ அகராதியாக செயல் படுகிறது. ஆம் ஆத்மி கட்சியிடம் எப்படி நடந்து கொள்வது என்று காங்கிரசுக்கு தெரியவில்லை. வேலியில் இருந்த ஓணானை மடியில்கட்டி கொண்ட கதையாக காங்கிரசின் நிலை மாறிவிட்டது. அதனால், மக்களவைதேர்தலில் பாஜக வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவர் அருண்ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார் .

இதுபற்றி அருண்ஜெட்லி கூறியிருப்பதாவது: அரசியலில் கடந்த சிலநாட்களாக நடந்துவரும் சம்பவங்கள் பா.ஜ.க.,வுக்கு பெரும்சாதகமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடுகள் பற்றி எதுவும்சொல்ல தேவையில்லை.

கூட்டணியே தடுமாறி கொண்டிருக்கிறது. நம்பிக்கைதரும் வகையில் அந்த கூட்டணியின் செயல்பாடுகள் இல்லை. மீடியாக்களால் தூக்கிவிடப்பட்ட ஆம் ஆத்மிகட்சி, பாஜக.வின் வெற்றிவாய்ப்பை சற்று குறைக்கும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தகட்சியின் அகராகிதனமான செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.டெல்லியில் ஆம் ஆத்மிகட்சி நடத்திய போராட்டம், மக்களின் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது. அதனால், காங்கிரசின்தோல்வி, ஆம் ஆத்மியின் அகராதிதனம், இல்லாத 3வது அணி ஆகிய அனைத்தும் சேர்ந்து நரேந்திரமோடி தலைமையில் பாஜக ஆட்சி அமையும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

வரும் மக்களவை தேர்தல், ஜனாதிபதி தேர்தல்போல் நடக்க உள்ளது. மோடியா – ராகுலா என்று நடக்க உள்ள போட்டியில் மோடி மிக எளிதாக வெற்றிபெற்றுவிடுவார். பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்றவெற்றியும். அதற்கு கிடைத்து வந்த மீடியா ஆதரவும் பாஜக.வுக்கு சற்று கலக்கம் ஏற்படுத்தியது உண்மைதான். எனினும், அதன், அகாராதிதனம் வெளியான பின், அந்த கலக்கம் போய்விட்டது. ஒருபோலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக குடியரசு தினகொண்டாட்டத்தை சீரழிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவுசெய்தது பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியிடம் எப்படி நடந்து கொள்வது என்று காங்கிரசுக்கு தெரியவில்லை. வேலியில் இருந்த ஓணானை மடியில்கட்டி கொண்ட கதையாக காங்கிரசின் நிலை மாறிவிட்டது. இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...