பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் மீனவர்களுக்கு என தனி அமைச்சகம்

 மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் மீனவர்களுக்கு என தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும் என்று மக்களவை எதிர் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி சிறை பிடிப்பதைக் கண்டித்து பாஜக.,வின் தமிழக மீனவரணி சார்பில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் கடல்தாமரை போராட்டம் பாம்பனில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது;

”இந்த ஆண்டு சாகித்ய அகாடமிவிருது, தமிழக மீனவ சமுதாயத்தை சார்ந்த ஜோ.டி.குருஸ் பெற்றிருக்கிறார். அவருக்கு முதலாவதாக எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம் இந்தியநாடு நீண்ட கடற் கரைகளைப் பெற்றநாடு. நம் நாட்டில் குட்டைகளில், ஆறுகளில், கடல்களில் மீன் பிடிக்கும் மீனவர்கள் என பல்வேறுதரப்பினர் உள்ளனர். அவர்களது பிரச்சினைகளும் தனித் தனியாக உள்ளது. அவற்றை நாம் தனித் தனியாக அணுகவேண்டும். அதேசமயம் இந்த மீனவர்கள் அனைவரும் வறுமையில் வாடுகிறார்கள். கல்வியிலும் பின் தங்கி இருக்கின்றார்கள்.

குஜராத்மாநில மீனவர்கள், பாகிஸ்தான் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்படுகிறார்கள். அதுபோல தமிழக மீனவர்கள், இலங்கை கடற் படையினரால் இது வரையிலும் 600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டிருக்கின்றார்கள்.

நான் இலங்கைக்கு இந்தியப் பிரதிநிதிகளுடன் கூட்டாக சென்ற போது, அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் இந்தியமீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டேன். அவரும் இலங்கை கடற்படையிடம் இந்தியமீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்துகிறேன் என்றார் . ஆனால் அதை அவர் கடைப்பிடிக்கவில்லை.

இந்தக் கூட்டத்தில் கணவனை இழந்த விதவை பெண்களை நான் பார்கின்றேன். மகனை இழந்த தாய்மார்களை பார்க்கின்றேன். நேற்றுகூட 38 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்தாக அறிகிறேன்.

இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களின் பிரச்சினைகள் பற்றி அறிய பாஜக சார்பில் பல்வேறுகுழுக்களை அமைத்து அவற்றை அறிக்கையாக பா.ஜ.க தேசிய பொதுசெயலாளர் முரளிதர் ராவ் முயற்சியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள அந்த அறிக்கையை  தமிழில் வெளியிடவேண்டும்.

பாஜக ஆட்சிக்குவந்தால் மீன் வளத்துறை உருவாக்கி, அதற்கு தனி அமைச்சர் நியமிக்கப்படுவார். இலங்கை தமிழர் பிரச்சினை, இந்தியப் பிரதமரால்தான் தீர்க்க முடியும். எனவே வலிமையான பாரதத்தை உருவாக்க பா.ஜ.க.,வுக்கு வரும் மக்களவை தேர்தலில் வாக்களியுங்கள்” என்றார்.

பின்னர் மக்களைவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மகனை இழந்த, கணவனை இழந்த மீனவத் தாய்மார்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...