பரிவர்த்தனை வரியை அறிமுகப்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.40 லட்சம்கோடி வரை வருமானம்

 நடைமுறையில் உள்ள அனைத்து வரிகளையும் ரத்து செய்து விட்டு பரிவர்த்தனை வரியை அறிமுகப்படுத்த வேண்டும், பரிவர்த்தனை வரியை அறிமுகப்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.40 லட்சம்கோடி வரை வருமானம் கிடைக்கும். என பா.ஜ.க தலைவர் நிதின்கட்காரி வலியுறுத்தியுள்ளார்.

தேசியவங்கி தொழிலாளர்கள் அமைப்பின் பொன் விழா ஆண்டு நாக்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர் நிதின்கட்காரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

நாட்டில் தற்போது 34 வரிகள் நடை முறையில் இருக்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.14 லட்சம்கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால் இந்தவரிகளை எல்லாம் ரத்து செய்து விட்டு, பரிவர்த்தனை வரியை அறிமுகப்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.40 லட்சம்கோடி வரை வருமானம் கிடைக்கும்.மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் ஊழலை வேரறுப்போம். மேலும் நிர்வாகம், நீதித் துறை, வரிவிதிப்பு, போலீஸ் எந்திரங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றின் சீர்திருத்தங்களில் பா.ஜ.க கவனம் செலுத்திவருகிறது. மேலும் பா.ஜ.க ஒரு தொலைநோக்கு ஆவணத்தை தயார்செய்து வருகிறது. படித்து முடித்து நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் இளைஞர்கள் கூட தங்களது வேலைகளை உதறி தள்ளிவிட்டு எங்களுடன் இணைந்து கட்சிபணி ஆற்றி வருகிறார்கள்.

ஆகையால் தகுதியும், திறமையும் உடைய வங்கிஊழியர்கள் தங்களது நேரத்தை வீணாக கழிக்கவேண்டாம். 20 ஆண்டுகள் சேவைக்குப்பின் அவர்கள் விருப்ப ஓய்வுபெற்று சமூக சேவையில் ஈடுபட வேண்டும். வங்கித்துறை நெருக்கடிக்கு மத்தியில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஊழியர்கள் மீதும் எங்களுக்கு அக்கறை உண்டு. ஊதியஉயர்வு மற்றும் போனஸ் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.இவ்வாறு நிதின் கட்காரி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...