வரும் லோக்சபா தேர்தலில், பாஜக.,வுக்கு 202 இடங்கள் கிடைக்கும் என்றும் , பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்கு 25 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் ஆக மொத்தத்தில் பாஜக கூட்டணி 227 இடங்களில் வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் கூட்டணி மிக குறைவாக, 101 இடங்கள் மட்டுமே பிடிக்கும் என்றும் டைம்ஸ்நவ் எடுத்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது
மாநில கட்சிகளின் செல்வாக்குமிகுந்த மாநிலங்களில், முக்கிய கட்சிகளுக்கு அதிகசீட்டுகள் கிடைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக. 27 தொகுதிகளின் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. திமுக.வுக்கு 5 இடங்களும், கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு 24 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இடதுசாரிகளுக்கு 14 இடங்கள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது..
காங்கிரசுக்கு 2 இடமும், பா.ஜ.க.,வுக்கு 1 இடமும், மற்ற கட்சிகளுக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆந்திரா: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்–13, தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமீதி–10, தெலுங்கு தேசம்–10, பா.ஜனதா–2, இதர கட்சி கள்–1.
கர்நாடகா: காங்கிரஸ்–14, பா.ஜ.க–11, ஐக்கிய ஜனதா தளம்–2, ஆம் ஆத்மி–1.
கேரளா: இடதுசாரி கூட்டணி–9, காங்கிரஸ்–7, பா.ஜனதா–1, இ.யூ.முஸ்லிம் லீக்–2, கேரளா காங்கிரஸ் (மணி)–1.
மகாராஷ்டிரா: பா.ஜ.க–15, சிவசேனா–15, காங்கிரஸ்–8, தேசிய வாத காங்கிரஸ்–5, இதர கட்சிகள்–4.
ஒடிசா: பிஜூ ஜனதா தளம்–12, காங்கிரஸ்–7, பா.ஜ.க–2.
உத்திரபிரதேசம்: சமாஜ் வாடி கட்சி–20, பகுஜன் சமாஜ் கட்சி–21, பா.ஜ,க–34, காங்கிரஸ்–4, ராஷ்டிரிய லோக் தளம்–1.
பஞ்சாப்: காங்கிரஸ்–6, சிரோன்மணி அகாலித் தளம்–5, பா.ஜ.க–2.
பீகார்: பா.ஜ.க–21, ஐக்கிய ஜனதா தளம்–5, ராஷ்டிரிய ஜனதா தளம்–12, லோக் ஜனசக்தி–1, காங் கிரஸ்–1.
அரியானா: பா.ஜ.க–6, காங்கிரஸ்–1, ஆம் ஆத்மி–1, இதர கட்சிகள்–2.
அசாம்: காங்கிரஸ்–7, பா.ஜனதா–5, இதர கட்சிகள்–2.
இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.