புதிதாக ஓட்டளிக்க உள்ள, 10 கோடி வாக்காளர்களையும் வரவேற்கிறேன். பாஜக., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 272 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிதாருங்கள்,” என்று , பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வரும், 16வது லோக்சபாவுக்கான தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டதும், அதை வரவேற்று, ‘ட்விட்டர்’ இணையதளம் மூலம், மோடி வாழ்த்துசெய்திகளை அனுப்பினார்.
அதில் அவர், மேலும் தெரிவித்ததாவது:
ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான, லோக் சபா தேர்தலில், அனைவரும் பங்கேற்று, நாட்டுக்காக ஓட்டளியுங்கள்; சரியான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்லுங்கள். புதிதாக, 10 கோடிபேரை, வாக்காளர்களாக சேர்த்துள்ள தேர்தல்கமிஷன், மார்ச், 9ம் தேதி வரை புதியவாக்காளர் சேர்ப்பு விவரங்களை சரிபார்க்க, வாய்ப்பு அளித்துள்ளதை பாராட்டுகிறேன்; இந்தவாய்ப்பை, தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்திய வாக்காளர்கள், எங்களை ஆசிர்வதிக்க கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம், நாட்டை முன்னேற்ற வாய்ப்புதாருங்கள். இவ்வாறு, அதில் மோடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.