உலகமகளிர் தினத்தை முன்னிட்டு 'நமோ' 'டீ' கடைகளில் 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் நரேந்திர மோடி பெண்களுடன் கலந்துரை யாடல் மேற்கொண்டார்.
பாஜக. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி இளமைகால பருவத்தில் தனது தாயாருடன் இணைந்து 'டீ' வியாபாரம் செய்து வந்தார். இதை காங்கிரஸ்கட்சி நரேந்திரமோடி ஒரு 'டீ' வியாபாரி என கடுமையாக கொச்சைப்படுத்தியது. இதையடுத்து நாடு முழுவதிலும் 300 நகரங்களில் ஆயிரம் இடங்களில் பாஜக.வினர் 'நமோ' 'டீ' கடைகளை திறந்தனர்.
இந்தகடையின் மூலம் பாஜக.வினர் பிரசாரமும் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சிலநாட்களாக குஜராத்திலிருந்து 'வீடியோ கான்பரன் சிங்' மூலம் நரேந்திர மோடி நாடு முழுவதிலும் உள்ள 'நமோ' டீ கடைகளில் பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்.
நேற்று உலகமகளிர் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் இருந்து நரேந்திர மோடி நாடு முழுவதிலும் உள்ள 'நமோ' டீக்கடைகள் மூலம் மகளிரிடையே கலந்துரையாடினார். 'டீ' அருந்தியபடியே நரேந்திரமோடி பெண்களுக்கான பிரச்சினைகள், எதிர் நோக்கும் சவால்கள் போன்றவற்றை கேட்டறிந்து பதிலும் அளித்தார்.
தமிழ்நாட்டில் 41 இடங்களில் நரேந்திர மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகன்றதிரையில் நேரிடையாக ஒளிபரப்பப்பட்டது.
சென்னையில் தியாகராய நகர், அயனாவரம், வேளச்சேரி, மைலாப்பூர், பெரவள்ளூர் உள்பட 9 இடங்களில் நடந்தது.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.