ஷ்யாமா பிரசாத் முகர்ஜி

 பாரதிய ஜன சங்கத்தின் தொடர்ச்சியான பாஜக, தன்னை ஜனதா கட்சியுடன் 1977-ல் இணைத்துக்கொண்டது. 1979-ல் உடைந்த ஜனதா அரசுடன் எழுந்த கருத்து வேறுபாடுகளால் பாஜக தொடங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

டாக்டர்.முகர்ஜீயின் தாயார் ஜோக்மயா தேவி மகன் இறந்த செய்தி கேட்டு உரக்கக்கூறுகிறார், “என் மகனின் இழப்பு இந்த பாரதத்தாய்க்கே இழப்பு என்பதில் பெருமை கொள்கிறேன்”.

1901 ஜூலை 6-ம் தேதி பிரபல குடும்பத்தில் பிறந்தார் முகர்ஜீ. அவரின் தந்தையார் சர்.அசுதோஷ் வங்காளத்தில் பரவலாக அறியப்பட்டவர். முகர்ஜீ, கொல்கத்தா பல்கலை கழகத்தில் பட்டம் பயின்று பின்னர் 1923-ல் அதன் செனட் உறுப்பினராகவும் ஆனார். தந்தையின் இறப்புக்குப்பிறகு 1924-ல் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

பின்னர், 1926-ல் லிங்கன்’ஸ் இண்-ல் பயில இங்கிலாந்து சென்ற அவர், 1927-ல் பாரிஸ்டர் ஆனார். 33 வயதில் உலகிலேயே இளம் வயது துணை வேந்தராக கொல்கத்தா பல்கலை கழகத்துக்கு நியமிக்கப்பட்டு, அங்கு 1938-ம் ஆண்டு வரை பணிபுரிந்தார். பதவிக்காலத்தில், ஆக்கபூர்வமான பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதே நேரத்தில், கொல்கத்தா ஆசிய சமூக அமைப்பிலும் செயல்பட்டார்; நீதிமன்ற உறுப்பினராகவும்; பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும்; பல்கலை கழகங்கள் வாரிய தலைவராகவும் பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்தார்.

கொல்கத்தா பல்கலை கழகத்தை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் வங்காள சட்ட மேலவை உறுப்பினராக காங்கிரசால் நியமிக்கப்பட்டார், காங்கிரஸ் சட்டமன்றத்தை புறக்கணித்ததால், அடுத்த ஆண்டே அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பின்னர் வந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1937-41 காலகட்டத்தில் கிரிஷக் பிரஜா கட்சி – முஸ்லிம் லீக் கூட்டணி அரசு

பதவியில் இருந்தபோது முகர்ஜீ எதிர்க்கட்சி தலைவரானார். ஃபஸ்லுல் ஹக் தலைமையிலான முற்போக்கு கூட்டணியில் சேர்ந்து, நிதி மந்திரியாகி ஒரு ஆண்டுக்குள்ளாகவே விலகினார். ஹிந்துக்களின் பிரதிநிதியாக குரல் கொடுக்கத்துவங்கிய அவர், சிறிது காலத்தில் ஹிந்து மஹாசபையில் சேர்ந்து பின்னர் 1944-ல் அதன் தலைவராகவே ஆனார். காந்தி படுகொலைக்குப்பிறகு, ஹிந்து மகாசபை தன்னை ஹிந்துக்களுக்கு மட்டும் என குறிக்கிக்கொண்டு விடக்கூடாது எனும் நோக்கிலும், அரசியல் கட்சியாக்கிக்கொண்டு எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும் எனும் நோக்கிலும் 1948, நவம்பர் 23-ல் அதை உடைத்துக்கொண்டு வெளியேறினார்.

பண்டித நேரு அவரை இடைக்கால மத்திய அரசில், தொழில்கள் மற்றும் வழங்கல் துறை மந்திரியாக்கினார். டெல்லி உடன்படிக்கையில் லிகாயத் அலி கானுடனான கருத்து வேறுபாட்டில், மந்திரிசபையிலிருந்து 1950, ஏப்ரல் 6-ம் தேதி முகர்ஜீ ராஜினாமா செய்தார். ஆர்எஸ்எஸ்ஸின் கோல்வால்கர் குருஜியுடன் கலந்தாலோசித்த பின்னர், 1951 அக்டோபர் 21-ம் தேதி பாரதிய ஜன சங்கத்தை டெல்லியில் தொடங்கி, அதன் முதல் தலைவரானார். 1952-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜன சங்கம் பாராளுமன்றத்தில் 3 இடங்களை பிடித்தது, அதில் ஒன்று முகர்ஜீ அவர்கள் வென்றது. 32 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ராஜ்ய சபையின், 10 உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, தேசிய ஜனநாயக கட்சியை பாராளுமன்றத்துக்குள் அமைத்தார். ஆனாலும் சபாநாயகர் அதை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கவில்லை.

எதிர்க்கட்சியின் குரலை பாராளுமன்றத்திற்கு வெளியே பதிவு செய்த அவர், 370 வது சட்டப்பிரிவின்படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்ததை அவர், இதை இந்தியாவை துண்டாடுதல் என்றும், ஷேக் அப்துல்லாவின் முத்தேச கொள்கை என்றும் வர்ணித்தார். ஹிந்து மஹாசபை மற்றும் ராம் ராஜ்ய பரிஷத்துடன் இணைந்து பாரதிய ஜன சங்கம், கொடூர விளைவுகளை ஏற்படுத்தும் விதிகளை நீக்கக்கோரி, மாபெரும் சத்யாக்ரகத்தை நடத்தியது. 1953-ல் காஷ்மீருக்கு விஜயம் செய்த முகர்ஜீ, மே, 11-ம் தேதி எல்லை தாண்டியதற்காக கைது செய்யப்பட்டார். 1953, ஜூன் 23-ம் தேதி, காவலில் இருக்கும்போதே மரணம் எய்தினார்.

அநுபவமிக்க அரசியல்வாதியான அவர், அவருடைய அறிவுக்கும் நேர்மறை பேச்சிற்கும், நண்பர்களால் மட்டுமின்றி எதிரிகளாலும் மதிக்கப்பட்டவர். அரசவையில் நேருவை தவிர்த்து மற்றெல்லா மந்திரிகளைவிட அவர் மிகவும் பிரகாசித்தார். சுதந்திரம் அடைந்த சொற்ப காலத்திலேயே, இந்தியா தன் பெருமைக்குரிய மகனை இழந்து விட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...