முதல் கோணல், முற்றும் கோணல்

 சிலர், எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நிலைமை கடினமாகிவிட்டால் அவ்வளவுதான் மிகவும் உடைந்துபோய் விடுவார்கள். ஐ.மு.கூட்டணியும் ராகுல் காந்தியின் கதையும் அப்படித்தான் போலும். நடக்கவிருப்பதை எதிர்பார்த்து மூத்த தலைவர்கள் கூட மூழ்கும் கப்பலை கழட்டிவிட்டுவிட முடிவெடுத்து விட்டார்கள். சிலர் போட்டியிட மறுக்கிறார்கள். மற்றவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் போட்டியிடவில்லையாம்.

நடக்கவிருப்பதை எதிர்பார்த்தோ என்னவோ ராஹுல் கூட தன் கட்சியின் ஒழுக்கம் பற்றி பேச முடிவெடுத்து விட்டார். கருத்துக்கணிப்புகள் வெறும் ஜோக் என்றும், 2009ல் பெற்றதைவிட அதிக இடங்களை கட்சி பெறும் என்கிறார். காங்கிரசாரின் மூழ்கும் நெறிகளை தூக்கி நிறுத்தும் நோக்கில் வேண்டுமானால் இது முற்றிலும் வெளிப்படையான அணுகுமுறை என ஒத்துக்கொள்ளலாம். அதேசமயம் உண்மையிலேயே இதுதான் உண்மையென நம்புவாரானால், அவர் நிஜத்திலிருந்து வேறுபட்டு விடுகிறார்.

தேர்தலுக்காக தயாரித்த அம்சங்கள் அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. அர்த்தமுள்ள யோசனைகளான அதிகாரத்துவம், அமைப்பை ஒழுங்குபடுத்துதல், போன்றவற்றை ஒதுக்கிவிட்டு, நம்பிக்கை இல்லாமல் முயற்சி செய்த அம்சங்கள், வேலைக்காகவில்லை. புரிந்துகொள்ள முடியாத, அரூப முழக்கங்கள் கொண்ட விளம்பர பலகைகள்தான் நாடு முழுக்க வைக்கப்பட்டுள்ளது. அதன் செய்திகள் மங்கலாக தெளிவற்று உள்ளது. மக்களோ விலைவாசி, பொருளாதாரம், ஊழல்களைப்பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்களுக்குத் தேவை முடிவெடுக்கும் ஆளுமைமிக்க தலைமைதான். இவ்வகையில் காங்கிரசும் ஐ.மு.கூட்டணியும் மேற்கண்ட அம்சங்களில் தோற்றுவிட்டார்கள். எதிர்தரப்பினரின் திட்டங்களுக்கு பதில் கொடுப்பதில்தான் சரியாக இருக்கிறார்கள்.

காங்கிரசால் சுமார் பத்தாண்டுகளாக செல்லம் கொஞ்சப்பட்ட சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் இந்த தேர்தல் வேளையில் அவர்களிடமிருந்து விலகி நிற்க முடிவெடுத்துள்ளார்கள். தி.மு.க., திரிணாமூல் மற்றும் LIP போன்றோரும் கழட்டிவிட்டுவிட்டனர். புது கூட்டணிகளும் சேருவது போல் இல்லை. தமிழகத்திலிருந்தும் ஆந்திரத்திலிருந்தும் தான் சென்ற தேர்தலில் அதிக இடங்களை ஐ.மு.கூட்டணி கொத்தாக அள்ளியது. ஒற்றை இலக்க வாக்கு சதவீதத்துடன் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. தமிழகத்தில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆந்திராவில் தெலுங்கானா விஷயத்தை நம்பிக்கை அடிப்படையில் அணுகாமல், வாக்கு வங்கி வியூகமாக விளையாடியது. சீமாந்த்ராவில் வேட்பாளர்கள் கடமைக்கு போட்டியிடுகிறார்கள். தெலங்கானாவிலும் TRS முதுகில் குத்திவிட்டது.

தெலங்கானாவில் பாஜகவிற்கு, தான் முன்பு ஒப்புக்கொண்ட தீர்வை நிறைவேற்றுவதாக பிரசாரம் செய்யும் வாய்ப்பிருந்தது. ஆனால் நாங்கள் அதை செய்ய விரும்பாமல் நேரடியாக எதிர்த்து விளையாடும் முறையை தேர்வு செய்தோம். தெலங்கானா மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிய நாங்கள், சீமாந்த்ராவிற்கு கூடுதல் பொருளாதார பலத்தையும் பெற்றுத்தந்தோம். நெஞ்சுயர்த்தி, தலைகுனியாமல் அந்த இரு பிராந்தியங்களுக்கும் நாங்கள் செல்லலாம். மக்களிடம் மட்டுமில்லாமல் சிறு பிராந்திய கட்சிகளிடமும் நன்மதிப்பை சம்பாதித்து உள்ளோம். தமிழகத்திலும் ஆந்திரத்திலும் எங்களுக்கு நல்ல கூட்டணி அமையும் வாய்ப்பிருக்கிறது.

காங்கிரசுக்கோ தலைமை கூட ஏற்புடையதாக இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேவையான வசீகரமும் கவர்ந்திழுக்கும்  சக்தியும் இல்லை. கடைசி நாளில் கூட, சரியான தேர்தல் வாக்குறுதியோ, தலைமையோ இல்லாமல் பொருந்தாக் கூட்டணியுடன் தேர்தல்களை சந்திக்கக்கூடும்.

முதல் கோணல், முற்றும் கோணல்..

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...